பேச்சு:உயிர்த்தோழன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்வளப் பகுதியில் நண்பி என்னும் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது...இது நண்பன் என்னும் சொல்லுக்குப் பெண்பால் சொல்லாகக் காண்பிக்கப்பட்டுள்ளது...இந்த அர்த்தத்தில் இப்படியொருச் சொல் தமிழ் அகராதிகளில் இருப்பதாகத் தெரியவில்லை...நண்பன் என்னும் சொல்லுக்குப் பெண்பாற் சொல் இல்லையென்று நினைக்கிறேன்...மைந்தன் எனும் சொல்லுக்குப் பெண்பாற் சொல் மைந்தி என இல்லாமலிருப்பதைப்போலவே நண்பன் எனும் சொல்லுக்கும் பெண்பாற் சொல் தமிழில் ஆதியிலிருந்தே முறையாகக் கிடையாதுபோல்தான் இருக்கிறது...நண்பி என்னும் சொல் எப்படியோ தமிழில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது...இதை ஏற்கலாமா?...பழந்தமிழ் நூல்களிலிருந்து நண்பி (தோழி) என்பதற்கு ஆதாரம் இருப்பின், சுட்டிக்காட்டினால் நவீன தமிழுலகிற்கு தெளிவுப்படுத்தினாற் போலிருக்குமல்லவா?..--Jambolik (பேச்சு) 21:20, 16 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உயிர்த்தோழன்&oldid=1461223" இலிருந்து மீள்விக்கப்பட்டது