பேச்சு:கங்காணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கங்காணி என்பதன் பொருள்,

  • அவனை கண்காணி (கண் + காணி)
  • அவர்கள் சரியாக வேலைசெய்கிறார்களா என கண் + காணி (கண்ணால் பார்த்துக்கொள்) எனும் பொருளில் வினைச்சொல்லாகும்
  • கண் + காணிப்பவர் என பெயர்சொல்லாகவும் பயன்படும்.

காலப்போக்கில் கண்கானி மருவி கங்காணி ஆகிவிட்டது. இலங்கை மலையகத்தோட்டங்களில் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்களும் பணிபுரிந்தனர். அவர்களில் சிலரும் கண்காணி (கங்காணி) களாக பணிபுரிந்தனர். விளைவு அவ்வாறு கண்காணிகளாக வேலைசெய்த சிங்களவர்களின் பரம்பரைப் பெயராக (முதற்பெயர்) கங்காணங், கங்காணம என வழக்கில் தொடர்கிறது -:)

எடுத்துக்காட்டு:

  • முதியான்சே கண்கானமலாகே
  • கொடிதுவக்கு கண்காணம்கே

இன்னும் நூற்றுக்கணக்கானவை உள்ளன

குறிப்பு: சிங்களவர்கள் தமிழர்களைப் போன்று தகப்பன் பெயரை முதற்பெயராக இடுவதில்லை. பரம்பரை பெயரையே இடுவர். (பரம்பரை பெயர் தொழில் அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும் இருக்கும்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கங்காணி&oldid=1121722" இலிருந்து மீள்விக்கப்பட்டது