பேச்சு:கரடி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
விலங்கினங்களுள் ஒன்று = பல்லூகம் என ஈடுகோள் குறி இட்டுக் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. இடப்புறம் உள்ளது பொதுவானது, வலப்புறம் உள்ளது ஒரு குறிப்பிட்ட விலங்கு. எனவே விலங்கினங்களுள் ஒன்றாகிய பல்லூகம் என்று வேண்டுமானால் குறிக்கலாம். ஒரு சொல்லை விளக்க மற்ரொரு சொல் இடுவதும் அவ்வளவாக நல்லதல்ல. பொருள் என்பது தலைச்சொல்லை விளக்குவதாக இருத்தல் வேண்டும். கரடி உடலில் மயிர் போர்த்திய, பெரிய உருவம் உடைய அனைத்துண்ணி விலங்கு. இது அறிவியலில் ஊர்சிடே (Ursidae) குடும்பத்தில் ஊர்சினே (Ursinae) உட்குடும்பத்தில் உள்ள ஒரு விலங்கு. ஒருவாறு நாய்ப்பேரினத்தோடும் தொடர்புடைய விலங்கு. என்பது போல விளக்கலாம். --செல்வா 17:56, 24 நவம்பர் 2010 (UTC)