பேச்சு:கருப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கறுப்பு or கருப்பு ?[தொகு]
  கருப்பு, கறுப்பு - நிறத்தைக் குறிக்க எதைப் பயன்படுத்த வேண்டும் ?. 
  கருப்பு என்று ஒரு சொல் இருக்கிறது. அதற்கு என்ன பொருள் என்றால் ‘பஞ்சம், வறுமையான காலகட்டம்’ என்பதுதான் பொருள்.
  
  காரிருள், கரி, கருமை, கருகிய.... இவை அனைத்தும் கறுப்பைக் குறிப்பதால் கருப்பு என்பது சரியாக இருக்காதா ? பார்ப்போம்.கறுப்பு என்பது நிறப்பெயர். கருமை என்பது பண்புப்பெயர். பண்புணர்த்தும் சொற்கள் மை விகுதி பெற்றுவரும் என்று அறிவோம். கறுமை என்று வராது. கருமை என்று வரும்.சிவப்பு என்று ஒரு நிறப்பெயர் இருக்கிறது. அதன் பண்புணர்த்தும் சொல் சிவமை என்றா வருகிறது ? இல்லை. செம்மை என்று வருகிறது. வெளுப்பு, வெள்ளை என்ற நிறத்தின் பண்புக்கு வெண்மை என்ற சொல் பயில்கிறது. பச்சைக்குப் பசுமை. ஆக,கறுப்பு என்ற நிறத்தின் பண்பினை உணர்த்தும் சொல்லாகக் கருமை என்று வரும். ஒரு நிறப்பெயரின் பண்பை உணர்த்த வேறு சொல் பயிலும் என்பதை ஏற்றுக்கொண்டால் இந்த ஐயம் முடிவுக்கு வந்துவிடும்.
                          - கவிஞர் மகுடேசுவரன்

மகுடேசுவரன் என்பவரின் முகநூல் பதிவொன்றில் இருந்து எடுக்கபட்டது மேலே உள்ள பத்தி. கருப்பு, கறுப்பு - இவற்றில் எது சரியான சொல் ?... - கவிஞர் மகுடேசுவரன் --Cangaran (பேச்சு) 07:27, 23 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கருப்பு&oldid=1475762" இலிருந்து மீள்விக்கப்பட்டது