உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காணொளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காணொலி என்பது பிழையானது, தயவு செய்து நீக்கிவிடுங்கள். (இது காணொளி என்று கருதினால் அது வேறு..)--சி. செந்தி 17:35, 16 சூன் 2011 (UTC) (காணொலி நீக்கப்பட்டது. வரலாற்றுப்பதிவுக்காக மேற்கண்ட பதிவு இங்கு என்னால் நகர்த்தப்படுகிறது.--23:52, 16 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..)Reply

காண்பதும் கேட்பதும் அல்லது காட்சியின் ஒலி என்ற பொருளில் காணொலியே சரி என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால் வீடியோ என்பது குறிப்பாக ஒளியைக்குறிப்பது. மௌன வீடியோக்களும் உண்டு அதனால் காட்சியும் ஒளியும் என்ற பொருளில் வழங்குவதில்லை. இங்கே ஒலியைவிட ஒளியே பிரதானக் கரு. எனவே காண்கின்ற ஒளி = காணொளி(வினைத்தொகை) சரியே என நினைக்கிறேன்.-Neechalkaran (பேச்சு) 10:55, 28 சூலை 2020 (UTC)Reply
காணொளியே சரி என்கிறார் மகுடேஸ்வரன். பதிவு -Neechalkaran (பேச்சு) 18:06, 11 செப்டம்பர் 2020 (UTC)
அண்மைய விவாதமொன்றி "காணொளி" என்ற ஆக்கத்திற்கு வலுசேர்க்கும் ஒரு கருத்தைக் கண்டேன்: யூட்டியூப்பை வலையொளி என்றும் ரேடியோவை வானொலி என்று வழங்குவதன் கருத்தில் கொள்ளத்தக்கது. சிங்கப்பூர் அதிகாரப்பூர்வ அகராதியில் காணொளி என்றே பயன்படுகிறது. வாக்கியத்தில் "காணொலியை ஒலிப்பதிவு செய்தேன்" என்று பயன்படுத்த மாட்டோம். "காணொளியை ஒளிப்பதிவு செய்தேன்" என்றே புழங்குகிறோம் என்பதும் கவனத்தில் கொள்ளலாம். -Neechalkaran (பேச்சு) 03:34, 28 சூன் 2021 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:காணொளி&oldid=1910502" இலிருந்து மீள்விக்கப்பட்டது