பேச்சு:கொள்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

செ'யமோகனுடைய கருத்துகள் அவருடைய தனிப்பட்ட உள்வாங்கல். இவற்றைப் பொதுவாக கூறமுடியாது. உண்மை என்று கைக்கொள்வது (ஏற்றுக்கொள்வது) கொள்கை. கோட்பாடு (உண்மை என்றோ, உகந்தது என்றோ) ஏற்றுக்கொண்ட (கொள்ளப்பட்ட) கருத்து. கருத்து என்பது பரவலான பொருள் கொண்டது. தனிக்கருத்து (opinion) என்னும் பொருளில் செ'யமோகன் குறிப்பிட்டுள்ளார் என எண்ணுகிறேன். கருத்து என்றால் எண்ணத்தில் உருப்பெற்ற ஒன்று. கருதுதல் என்றால் எண்ணத்தில் பலவாறு பொருத்தியும், அலசியும், உள்ளுக்குள் கேள்விகள் கேட்டு சிந்தித்துப் பார்த்தல் என்று பொருள். கருது = எண்ணும் (சிந்தி). எனவே கருத்து என்பது எண்ணக்கரு. --செல்வா 01:35, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கொள்கை&oldid=777305" இருந்து மீள்விக்கப்பட்டது