பேச்சு:திருக்குறளில் உள்ள சொற்களின் அகரவரிசைப் பட்டியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மயூரனாதன், நல்ல பட்டியலை தந்திருக்கறீர்கள். அடிக்கடி விக்சனரி போக வேண்டுகிறேன. மிசை என்னும் சொல்லுக்கு 1/3-2 என்று குறித்திருப்பதின் பொருள் முதல் அதிகாரம் மூன்றாவது குறளில் இரு முறை இந்த சொல் வருகிறது என்பதாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். சரியா? எண்களுக்கும் சொல்லுக்குமான பொருளை அடிக்குறிப்பாகவே, கட்டுரைத் தொடக்கத்திலோ குறித்து விட்டால் நன்றாக இருக்கும்--ரவி 18:39, 1 நவம்பர் 2006 (UTC)

ரவி, எண்களுக்கான பொருள் குறித்து உங்கள் விளக்கம் சரி. அதன் விளக்கங்களை நான் பின்னர் சேர்த்துவிடுகிறேன். இவற்றை முழுமையான பட்டியலாக்குவது எனது எண்ணம். அத்துடன் இங்கே இடம்பெறுகின்ற சொற்கள் சில, சொற்களுக்கான முதன்மைப் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளிலும் வேறாக அமைவதும் உண்டு. எ.கா: கோடு (மலை). இப்படியான சொற்களுக்கு உள்ள கூடுதல் பொருளையும் முதன்மைப் பக்கங்களில் சேர்த்துவிடலாம். இத்தகைய பட்டியல்கள் குறிப்பிட்ட காலங்களில் சொற்பயன்பாடுகளை அறிந்துகொள்ளவும் பயன்படும்.Mayooranathan 02:52, 2 நவம்பர் 2006 (UTC)