பேச்சு:பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதில் தந்துள்ள திரு.செயமோகனின் கருத்து அவருடைய சொந்தக் கருத்து, அதற்குப் போதிய சான்றுகோள்கள் இல்லை. எனவே அதனை நீக்குதல் நல்லது. சாய்வு இல்லாத எடுத்துக்காட்டுகள் தர வேண்டுகிறேன். பள்-பண்-பட் ஆகிய சொல்வடிவங்கள் மொழியியல் படி தொடர்புடையன (ள்-ண்-ட் தொடர்பு). பள்ளு, பண், படு, படி, பாடு என மிகப்பல சொற்கள் தொடர்புடையன. படி என்பது உள்ளத்துள் (கருத்துகள், எண்ணங்கள், வழக்கங்கள்) படிதல்; பழக்கம், வழிமுறைகள் அறிதல் என்று கருத்துகளின் அடிப்படையாக படி, படித்தல் ஆகியன வரலாம் (இதெல்லாமும் நிறுவப்படாத கருத்துகளே). படிப்பு என்றால் பழக்கம். பள் என்பது தாழ்தல் (பள்ளம், பள்ளம் என்றால் ஆழம் என்றும் பொருள், பள்ளத்தாக்கு), குள்ளம் (பள்ளை என்றால் குள்ளமானது). இப்படியே பண், பண்பட்டது, பண்பு என்று விரித்துக்கொண்டே போகலாம். பள்ளி என்பது பல கோணங்களில் நோக்கில் படுத்து உறங்கும் இடம், அமர்ந்து கற்கும் இடம்(பள்குதல் -பதுங்குதல் - கழக அகராதி); பாட்டோடு சேர்ந்து கற்கும் இடம் (யாப்பு செய்யுள் முதலியன பாட்டு. படி, பாடு, பாட்டு). சரியான சொற்பொருள் வரலாறு தெரியாமல், சாய்வு தருமாறு அமையும் மேற்கோள்கள் வேண்டாம் என்று வேண்டுகிறேன். --செல்வா 17:14, 26 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பள்ளி&oldid=952918" இலிருந்து மீள்விக்கப்பட்டது