பள்ளி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பள்ளி (பெ)
- கல்வி கற்பித்துக் கற்கும் இடம்; கல்விக்கூடம், பள்ளிக்கூடம். பெரும்பாலும் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கல்விக் கற்கும் இடத்துக்குப் பள்ளி என்று பெயர். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்ற பிரிவுகளும் உண்டு
- படுத்து உறங்கும் இடம்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள். சமணர் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. அங்கே கல்வி அளிக்கப்பட்டமையால்தான் பள்ளி என்ற சொல்லே வந்தது. அந்த கல்விக்காக சமணர் எழுதிய பாடநூல்களே நீதி நூல்களும் நன்னூல் போன்ற இலக்கணநூல்களும். (இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள், ஜெயமோகன்)