பேச்சு:பெண்குறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இங்கே அந்தப் படம் அவசியம் தானா? நீக்கி விடலாமே.. இதைப்போலவே மைதுனம், கரமைதுனம், சுயஇன்பம் போன்றச் சொற்களைப் பதிவேற்றி அதற்குண்டான படங்களையும் இணைத்தால் எப்படி இருக்கும்?--Jambolik 19:00, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]

  • இம்மாதிரி படங்கள், குறிப்பாக உறுத்தும் படங்கள், அவசியமில்லை என்பதே என் கருத்து.
கண்டிப்பாக அவசியம். பாலியல், பாலுணர்வு ஆகிய விசயங்களைத் தணிக்கை செய்யத் துவங்கினால் பிற விசயங்களிலும் தணிக்கை செய்ய வேண்டி வரும். பாடநூலிலும், அகரமுதலியிலும், கலைக்களஞ்சியத்திலும் தணிக்கைப் போக்கு கூடாது. இதில் ஆரம்பித்தால், அடுத்து இன்னும் பல விசயங்களில் தணிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும். ”உறுத்தும்” என்பது subjective judgement. அது போலவே இதுவும். இப்படம் இச்சையைத் தூண்டும் கிளர்ச்சிப்படமாகவா பயன்படுத்தப்பட்டுள்ளது?. சிறிய அளவில் கல்வி நோக்கில் சித்தரிக்கும் படமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க இதனை நீக்கக்கூடாது.
இது போன்ற விவாதங்கள் பல விக்கித்திட்டங்களில் நடந்துள்ளன / நடந்து வருகின்றன. அவற்றில் உள்ள ஒற்றுமை - ஒன்றில் தணிக்கை துவங்கினால், தானாக பிற விசயங்களுக்கும் தணிக்கை தாவும். தேவையற்ற சர்ச்சைகளும் சண்டைகளும் உருவாகும் (தணிக்கை என்று சர்ச்சையைக் கிளப்பாமல் இருந்துள்ளது?). நானறிந்து அரபு விக்கியில் மட்டுமே இம்மாதிரியான படங்களுக்கு தடை உள்ளது - சவூதி அரேபியத் தணிக்கை விதிகளின் காரணமாக.
உறுத்துவன போலிருந்தால், விரும்புவோர் மட்டும் பார்க்கும்படி மாற்றலாம். இப்போது அவ்வாறு செய்துள்ளேன். (இவ்வாறான ஒரு imagefilter மீடியாவிக்கி நீட்சி உருவாக்கப்பட்டு வருகிறது. அது நடப்புக்கு வந்தால், இது போன்று படங்களைக் காண அஞ்சுபவர்கள் அவர்களாக விருப்பத் தேர்வுகள் மூலம் படங்களை மறைத்துக் கொள்ளலாம்). --சோடாபாட்டில்உரையாடுக 05:41, 8 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நன்றி. மிக அருமையானத் தீர்வு. பக்கத்தைத் திறந்தவுடன் பார்வை படத்தின்பால் ஈர்க்கப்படாமல் பொருளைப் படித்தபின் விருப்பப்பட்டால் படங்களையும் பார்த்துக்கொள்ளலாம். எனக்குத்தெரிந்து சிறுவர்களும் சிறுமிகளும் விக்சனரியில் சொல்லின் பொருளைத் தேடுகிறார்கள்.சட்டென்று அவர்களின் கண்களில் இம்மாதிரியான படங்கள் பட்டால் அவற்றின்மீதே அவர்களின் கவனம் முதலில் பாயும்!! பிறகுதான் விசயத்தைப்படிக்க தொடங்குவர் என்பது என் எண்ணம். --Jambolik 14:32, 8 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பெண்குறி&oldid=1058940" இலிருந்து மீள்விக்கப்பட்டது