பயனர் பேச்சு:Sodabottle

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

 • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
 • இப்பக்கத்தில் நடைபெறும் உரையாடலில் கலந்துரையாட அழைக்கிறேன்.
வணக்கம்.--த*உழவன் 13:42, 1 அக்டோபர் 2010 (UTC)Reply

ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்[தொகு]

நீங்கள் புதிய சொற்களைத் தொடர்ந்து உருவாக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. கீழ்கண்டவைகளையும் உங்கள் கருத்தில் கொண்டு மேலும் சிறப்பாக பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

 1. பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் தகுந்த இடங்களில் சேர்க்கவும்.(எ. கா.) declaration of war
 2. ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு இணைப்பைத் தரும் போது வலப்பக்கம் en என்ற வழு வருகிறது. அதை நீக்க எண்ண செய்யணும்?
 3. ஆங்கிலம் கூட்டுச்சொற்களில் உள்ள சொற்பிறப்பியல் 99% கட்டுரையில்லா வெளியிணைப்பைத் தருவதால் அதனை தவிருங்கள். ஆனால், அந்த வார்ப்புரு{.{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}} ஆங்கில தனிச்சொற்களுக்கு சரியாக வரும்.

ஏதேனும் உதவிகள் தேவைப்படின், மறவாமல் கேட்கவும்.--த*உழவன் 05:55, 1 நவம்பர் 2010 (UTC)Reply


கவனத்தில் கொள்கிறேன். அந்த “en" வார்ப்புருவில் ஏதோ கோளாறு. ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.--Sodabottle 06:19, 1 நவம்பர் 2010 (UTC)Reply

நாம் இனி இப்படி பயன்படுத்தலாம்.(எ. கா.) New Zealand--த*உழவன் 02:23, 7 டிசம்பர் 2010 (UTC)

புரியலையே. எதற்கு பதிலாக இது?--Sodabottle 03:37, 7 டிசம்பர் 2010 (UTC)
புரிந்தது புரிந்தது :-) நன்றி.--Sodabottle 03:38, 7 டிசம்பர் 2010 (UTC)

Norsk Bokmal[தொகு]

உங்களுடன் உடன் இணைய முடியவில்லை. வருந்துகிறேன். புதிய முயற்சிகளால் மிகவும் மகிழ்கிறேன். என் பேச்சுப் பக்கத்தில் சில கருத்துகளை இட்டுள்ளேன்--த*உழவன் 01:02, 14 நவம்பர் 2010 (UTC)Reply

வார்ப்புரு மாற்றம் - தானியங்கி வழியாகச் செய்யவும்[தொகு]

தாங்கள் இப்போது ஆரம்பித்துள்ள மொத்தமான வார்ப்புரு மாற்றம் தானியங்கி அனுமதியுடன் செய்யப்படவேண்டியது. அப்போதுதான் இவ்வாறான மாற்றங்கள் அண்மைய மாற்றங்களில் வந்து பயனரின் மாற்றங்களை மறைக்காது. எந்திரன் தானியங்கி மூலமோ அல்லது உங்களுக்கென்று தானியங்கி அனுமதி பெற்றோ செய்யலாம். பழ.கந்தசாமி 21:12, 11 மார்ச் 2011 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கந்தசாமி, நிறுத்தி விட்டேன். வேறு யாரும் தொகுக்காத நேரத்தில் ஒரு இருநூறு மட்டும் சோதனை ஓட்டம் செய்யலாம் என்று எண்ணி ஆரம்பித்தேன். இதற்கென விரைவில் தனி தானியங்கி கணக்கு தொடங்கி அனுமதிக்கு விண்ணப்பிக்கிறேன்.--Sodabottle 21:17, 11 மார்ச் 2011 (UTC)

வழிமாற்று[தொகு]

valediction,valedictory address போன்ற synonyms-களை பக்கமாற்றம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு வார்த்தைக்கு எழுத்துப்பிழை முதலியன இருந்தால் மட்டுமே செய்யவும. தனிப்பட்ட பயன்பாடு, விளக்கம், மூலம் முதலியன குறிக்கத் தனித்தனிப் பக்கங்கள் அவசியம். வேண்டுமானால் synonym என்று குறிப்பிடவும். நன்றி. பழ.கந்தசாமி 15:05, 14 மார்ச் 2011 (UTC)

சரி. தனிப்பக்கமாக மாற்றி விடுகிறேன்.--Sodabottle 15:06, 14 மார்ச் 2011 (UTC)

தானியங்கி[தொகு]

தானியங்கி என்றால் என்ன?---Eldiaar 20:32, 14 மார்ச் 2011 (UTC)

ஒரே மாதிரி உள்ள பணியை மீண்டும் மீண்டும் செய்வதற்கு நமக்கு அலுப்பு தட்டிவிடும் அல்லவா. அதை automatic ஆக செய்ய வழி வகைகள் உள்ளன. அதுவெ தானியங்கி கணக்கு தொடங்கு. எ. கா. ஒரு எழுத்துப் பிழை 10,000 பக்கங்களில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பயனர் 10,000 பக்கங்களிலும் போய் மாற்றுவது என்பது கடினம். அதற்கு பதிலாக ஒரு தானியங்கி கணக்கை ஏற்படுத்தி இதைச் செய்ய ஏவி விடலாம் (நிரலாக்கம் செய்து). அது தானாக செய்து விடும். இப்படி பல தானியங்கிகள் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கின்றன. சாதாரண விசயங்களை தானியங்கி செய்துவிடும், கொஞ்சம் சிக்கலானவற்றை பயனர்கள் தான் செய்ய வேண்டும் என்பது விக்கி வழமை.--Sodabottle 04:01, 15 மார்ச் 2011 (UTC)

நமக்குப் பாராட்டுகள் :)[தொகு]

அன்பின் Sodabottle, அண்மைய 1000 சொற்களும் (193K=>194K) முழுவதும நம்மிருவரின் பங்களிப்புகள். அயராமல் சொற்களைச் சேர்த்துவருவதற்கு நன்றி. இவ்வாறு தொடர்ந்து பங்களித்தால் 2 மாதங்களுக்கு குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளாவது சேர்க்கலாம். முயல்வோம்.. பழ.கந்தசாமி 12:34, 2 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி கந்தசாமி, நான் ஒரு 150-200 தான் சேர்த்திருப்பேன். உங்களது தான் பெரும்பங்கு. இம்மாதம், என் பங்களிப்பை இரட்டிப்பாக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன் :-). தினம் ஒரு 10 சொற்களாவது சேர்ப்பது இம்மாத இலக்கு--Sodabottle 14:18, 2 ஏப்ரல் 2011 (UTC)
மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வாரம் 150 என்று ஓர் குறைந்தபட்ச இலக்கானால், 6 வாரத்தில் 1000. முயற்சிப்போம். பழ.கந்தசாமி 16:21, 2 ஏப்ரல் 2011 (UTC)

Hi. What does பகுப்பு:போர்த்துகீசியம்-பெயர்ச்சொற்கள் contain? Is it "Portuguese nouns"? Thanks, Malafaya 11:28, 10 ஏப்ரல் 2011 (UTC)

yes. i will add the necessary interwiki links--Sodabottle 11:29, 10 ஏப்ரல் 2011 (UTC)
Thanks. I was going to do that too :). BTW, I moved berinjela* to correct name. Malafaya 11:30, 10 ஏப்ரல் 2011 (UTC)
iw links added now. Thanks for moving it. :-)--Sodabottle 11:31, 10 ஏப்ரல் 2011 (UTC)

Hi again, Sodabottle! Could you please add relevant interwikis to the following verb categories?:

I think there may some duplicated ones. Let me know when you have done it. I also found a strange page in one of these: dado2. Why the number 2 there? Malafaya 13:14, 12 ஏப்ரல் 2011 (UTC)

Done (except for no 3, which is a tamil grammar classification). பகுப்பு:எசுப்பானிய வினைச்சொற்கள் and பகுப்பு:எசுப்பானியம்-வினைச்சொற்கள் are duplicates. i will run AWB to merge themdone now. and i have tagged dado2 to be moved to project/userspace. Some time back we had a major discussion about page design, and this is one of the sample pages designed then. (we had to keep them in mainspace to see how search engines indexed them). There are a few more like this, i will tag them for moving.--Sodabottle 14:34, 12 ஏப்ரல் 2011 (UTC)
Thanks a lot. Malafaya 18:07, 12 ஏப்ரல் 2011 (UTC)

பகுப்பு:இலத்தீன்-பெயர்ச்சொற்கள் = Latin nouns? Malafaya 16:34, 14 ஏப்ரல் 2011 (UTC)

yes. iw links added now--Sodabottle 16:49, 14 ஏப்ரல் 2011 (UTC)

பகுப்பு உதவி[தொகு]

Sodabottle, நான் எசுப்பானியம்-உறவுகள் என்ற பகுப்பை உருவாக்கினேன். சரியாகச் செய்யவில்லை என நினைக்கிறேன். சிவப்பில் வருகிறது. சரி செய்ய என்ன செய்யவேண்டும்? மேலும், பகுப்பில் தேடுபொறிக்கு இசைந்தவாறு மாற்றுவதாக ஏதோ தெரிவித்திருந்தீர்களே, அது எப்படி? நன்றி. பழ.கந்தசாமி 18:08, 17 ஏப்ரல் 2011 (UTC)

சரி செய்துள்ளேன். பகுப்புகளுக்கு “பகுப்பு:” எனற் முன்னொட்டு வேண்டும். எ. கா பகுப்பு:எசுப்பானியம்-உறவுகள். அது இல்லாமல் இருந்ததால், சாதாரண பக்கம் போல் கருதப்பட்டுவிட்டது. தற்போது ஒரு பகுப்பை உருவாக்கி வார்த்தைகளில் இணைத்துள்ளேன். (தேடுபொறி இசைவு பற்றி நான் எதுவும் சொன்னது போல இப்போது நினைவில்லையே?. மறந்துவிட்டேன். தேடிப் பார்க்கிறேன் என்ன சொல்லியிருந்தேனென்று :-))--Sodabottle 06:31, 18 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி.
கன்னடமும் கவின் மலையாளமும் சொற்களை வேகமாக இட்டுவருகின்றனர், பார்த்தீர்களா? மலையாளத்தில் சொற்களை ஒரு தானியங்கியை ஏவி இட்டுவருகின்றனர். பழ.கந்தசாமி 06:40, 18 ஏப்ரல் 2011 (UTC)
கன்னடம் வேகமாக வளருவதை முன்பே கவனித்திருந்தேன் (ஒரு லட்சம் சொற்களைத் தாண்டியதைக் குறிக்க இந்திய விக்கி மின்னஞ்சல் குழுமத்தில் அறிவிப்பு வந்தது), மலையாளத்தின் வளர்ச்சியை கவனிக்கவில்லை. அவர்கள் தானியங்கியைப் பற்றி அங்கு விசாரித்துப் பார்க்கிறேன்.--Sodabottle 08:22, 20 ஏப்ரல் 2011 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

சோடாபாட்டில், நீங்கள் நிருவாகப் பொறுப்பு ஏற்பது விக்சனரி பராமரிப்புக்கு உதவும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவிக்கவும். நன்றி--ரவி 15:33, 28 ஏப்ரல் 2011 (UTC)

நிரல் உதவி[தொகு]

இங்கு உள்ளது போன்று (http://en.wiktionary.org/wiki/%D1%85%D0%BE%D0%BB%D0%BE%D0%B4%D0%BD%D1%8B%D0%B9#Declension) , மறைக்கவும் பின்னர் சொடுக்கும் போது காட்டவும் விக்சனரியில் செய்ய முடியுமா? எதோ ஒரு ஜாவா நிரல் தேவை என்று நினைக்கிறேன். இதே போலுள்ளது தமிழ் விக்கியில் வேலை செய்கின்றது. இப்பக்கத்தில் உள்ள பயனர்:Drsrisenthil/வார்ப்புருக்கள் உருசிய இலக்கணப் படிவம் இவ்வாறு மறைக்கப்பட்டு சொடுக்கும் போது தோன்றவேண்டும்.--சி. செந்தி 14:13, 5 மே 2011 (UTC)Reply

செந்தி இதற்கு common.css கோப்பினை ஆங்கில விக்கியில் உள்ளது போல இற்றைப்படுத்தவேண்டியுள்ளது (navframe, navhead போன்ற class களில் அங்கு நிறைய புதிய விசயங்கள் சேர்க்கப்பட்டுளளன. அவற்றுள் இந்த மறைக்கும் விசயமும் ஒன்று). மீடியாவிக்கி கோப்புகளைத் தொகுக்க நிருவாகி அணுக்கம் தேவை. எனது நிருவாகியாக்க வேண்டுகோள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அணுக்கம் கிடைத்தபின், இற்றைப்படுத்தி விடுகிறேன்.--Sodabottle 14:42, 5 மே 2011 (UTC)Reply
நன்றி சோடாபாட்டில், இந்தச் சிக்கல் தீர்ந்தால் சில வார்ப்புருக்கள் மெருகு பெரும்.--சி. செந்தி 15:03, 5 மே 2011 (UTC)Reply
நிர்வாகப்பொறுப்பு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள்!
மேலும் ஒரு உதவி நேரம் கிடைக்கையில் கூறுங்கள், நான் முன்பு AWB பயன்படுத்தி csv loader மூலம் விக்சனரிக்குச் சொற்களை பதிவேற்றம் செய்தேன், இப்போது awbஇல் பிழை உண்டாகின்றது, புதிய csv loader.dll பயனர் கணேசின் ஆ.வி.யில் இருந்து எடுத்தேன், பலனில்லை..உங்களுக்கு awb + csv loader வேலை செய்கின்றதா?--சி. செந்தி 18:57, 7 மே 2011 (UTC)Reply
1)முதல் விசயத்தை செய்துள்ளேன். சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்
2) AWB எனக்கு ஒழுங்காக வேலை செய்கிறதே. என்ன பிழை வருகிறது உங்களுக்கு?.
--Sodabottle 06:07, 8 மே 2011 (UTC)Reply
நன்றி, அதை எப்பொழுதும் மறைந்து இருக்குமாறு செய்யமுடியுமா? தேவையான நேரத்தில் மட்டும் சொடுக்க, காட்டுமாறு இருத்தல் நன்று. :)
AWB வேலை செய்கிறது, என்ன பிழை இருந்தது என்று தெரியவில்லை..ஏதோ syntax error போலும்..--சி. செந்தி 12:40, 8 மே 2011 (UTC)Reply
auto collapse தெரிவு எப்படி ஏற்படுத்துவது என்பது இங்கு தரப்பட்டுள்ளது- en:w:Wikipedia:NavFrame. (தெரிவுக் கட்டுபாடு, ஒவ்வொரு பட்டியலிலும் உள்ளது, ஒட்டுமொத்த நிரலில் அல்ல)--Sodabottle 13:44, 8 மே 2011 (UTC)Reply
நன்றி சோடாபாட்டில்--சி. செந்தி 14:39, 8 மே 2011 (UTC)Reply

கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு கருவி[தொகு]

இந்த மொழிபெயர்ப்பு கருவி, தமிழ் விக்சனரியின் மொழிபெயர்ப்பை பயன்படுத்துகிறதா? நீங்கள் பயன்படுத்தி பார்த்து கூறினால், நானும் அதனைப் பயன்படுத்த எண்ணுகிறேன்.--17:52, 1 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இல்லை. இது நாமாக உருவாக்கும் தரவை பயன்ப்டுத்திக்கொள்ளும். மாஹிர் இதற்காக உருவாக்கிய மொழிபெயர்ப்புப் பட்டிய இது. இதிலுள்ள வார்த்தைகள் மட்டுமே மாற்றப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:04, 1 சூன் 2011 (UTC)Reply

மொழிபெயர்க்கும் உங்களுக்கு இக்கருவி பயனளிக்கிறதா? அல்லது ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்க்க வேறு ஏதேனும் கருவியுண்டா? அதற்கு உங்களின் வழிகாட்டல் என்ன? அறிய ஆவல்.--18:18, 1 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பட்டியல்கள், வார்ப்புருக்கள் போன்றவற்றை மொழிபெயர்க்கப் பயன்படுகிறது. ஆனால் சொற்றொடர்களை மொழி பெயர்க்கும் அளவுக்கு தமிழில் எந்தக்கருவியிம் இன்னும் செம்மைப்படவில்லை (கூகுள், விக்கிபாசா உட்பட அனைத்தும்).அவற்றைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நாமே எழுதி விடலாம் என்ற நிலையில் தான் உள்ளன--சோடாபாட்டில்உரையாடுக 18:35, 1 சூன் 2011 (UTC)Reply

தெளிவுபடுத்தியதற்கு நன்றி. சோ.பா! தமிழக உயிரியல் பள்ளிப்பாடங்களைச் சற்று விரிவாக மொழிபெயர்க்கலாமென்று எண்ணியிருக்கிறேன். அதனால் கேட்டேன்.அவ்வப்பொழுது, தங்களைத் தொடர்பு கொள்கிறேன்.இம்மாதம் 10தேதிவரை, அப்பாவுடன் மருத்துவமனையில் அதிக நேரம் இருக்க வேண்டிய சூழல். அதன்பிறகே செய்ய வேண்டும். பிறகு சந்திப்போம். வணக்கம்--23:32, 1 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அடைப்புக்குறியுள்ள சொற்களை நீக்கல்[தொகு]

AWBயில் அடைப்புக் குறியுள்ள சொற்களை skip செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? தங்களின் நீக்கல் பதிவுகளைக் கண்டு மகிழ்ந்தேன். அது திரும்பவும் வராமல் இருக்கவே இதனைக் கேட்கிறேன். --14:23, 17 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

skip tab இல் "match" அடியில் "contains" என்றொரு பெட்டி உள்ளது பாருங்கள். அதில் அடைப்புகளை (முதலில் ஒரு பக்க அடைப்பு மட்டும் இட்டு) சோதித்துப் பாருங்கள். இதற்கு முன்னர் முழு வார்த்தைகளே இங்கு இட்டு செய்துள்ளேன். ஒரு அடைப்புக்கு மட்டும் வேலை செய்யுமா என்று தெரியவில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 14:33, 17 சூன் 2011 (UTC)Reply

நீங்கள் கூறியபடி செய்து பார்த்தேன். வேலை செய்யவில்லை.அட்டவணை செயலியிலேயே நீக்க முயற்சி எடுக்கிறேன்.நாளை பார்ப்போம். சோர்வாக இருக்கிறது. உறங்கச் செல்கிறேன். வணக்கம்--16:16, 17 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

the edit summary[தொகு]

இங்கு மேலுள்ள தலைப்பில், ஒரு வசதியைக் கோரியுள்ளேன். நீங்களும் ஆமோதித்தால் நன்றாக இருக்கும்.--16:52, 27 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Interwikis/English categories[தொகு]

Hi.

This category பகுப்பு:ஆங்கிலம்-மீன்கள் is about fish in all languages or just English? I ask this because it has interwiki links to the general Fish categories. I think this is because English used to have English and all languages in the same category. This has now changed. English languge categories are now preceded by en:, i.e., [[Category:en:Fish]]. Lots of updates will be needed in all Wiktionaries to reflect this change. Thanks, Malafaya 13:06, 28 சூன் 2011 (UTC)Reply

It is "english-fishes". i will start making the necessary updates. Thanks for the information. this is going to be a loong week. i hate categorising :-) )--சோடாபாட்டில்உரையாடுக 13:14, 28 சூன் 2011 (UTC)Reply
Thanks for all the help you can dispense in advance :). Cheers, Malafaya 13:35, 28 சூன் 2011 (UTC)Reply

தொகு வசதி[தொகு]

 1. இதில் உள்ளபடி தொகு வசதி தலைப்பு அருகே அமைந்தால் சிறப்பாக இருக்கும். படங்கள் வரும் பொழுது, இந்த தொகு வசதி கட்டுரை அமைப்பில் குழப்பத்தையே தடுக்கும்.
 2. தொகு என்பதற்கு மாற்றாக, இதில் உள்ளபடி படமிடலாம். எளிய ஆங்கிலம் தளத்தில் இருப்பது போல, தொகு என்பதற்கு பதிலாக எழுது எனமாற்றலாம்.உருசிய விக்கியை பாருங்கள் கருப்பு வெள்ளைத்தவிர பிற நிறங்களும் அளவுடன் பயன்படுத்துப்படுகிறது. இத்தகைய மாற்றங்களைstyle sheet(ss)-இல் மாற்றலாமென்று கூறுகின்றனர். இது குறித்து எண்ணவும்--19:00, 29 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

interwiki links குறித்த ஐயம்[தொகு]

aber என்ற எழுத்துக்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள், சில மொழிகளில் இருப்பதால், எந்த மொழியின் interwiki இங்கு சேரும்.--13:46, 14 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஒரு விக்கியில் aber என்ற ஒரு எழுத்துக்கூட்டல் தலைப்பு தானே இருக்க முடியும்?. இல்லை டயாகிரிட்டிக்குகள் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்டவை உருவாக்கியுள்ளார்களா?--சோடாபாட்டில்உரையாடுக 13:55, 14 சூலை 2011 (UTC)Reply

மன்னிக்கவும். நான் தான் குழப்பிக் கொண்டேன். தலைப்புச்சொல்லை மட்டுமே இணைக்கும். டயாகிரிட்டிக்குகள்? என்பதற்கு இங்கு ஒரு பக்கம் உருவாக்குங்கள்.நன்றி. வணக்கம்--01:00, 15 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மலரும் மொட்டு[தொகு]

எனது நிலை..

மொட்டாக இருந்த என்னை மலர வைத்தமைக்கு நன்றி.

நான் மலர்ந்ததற்குக் காரணங்கள்,ஏற்கனவே, சொன்னது தான். இருப்பினும் இன்னொரு முறைச் சொல்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.

நான் வாடி நின்ற பொழுது, என்னை வாடாமல் அவ்வப்போது என்னிடம் பேசி, என்னைப் பேணியவர் பழ.கந்தசாமி அவர்கள் தான். அவ்வப்போது, பல வேலைகளுக்கும் நடுவில் எனது ஐயங்களுக்கு பதிலளித்து ஊக்குவித்து, உறுதுணையாக இன்று வரை இருக்கிறார். அவருக்கு அடுத்து, உங்களின் உதவிக் கரங்கள்.பின்வருவனவற்றால் என்னை மலர வைத்தீர்கள்.

 1. ஆங்கில வீக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கத்திலும் பேச எனக்குள் துணிச்சலை உண்டாக்கிய விதம்,அதனால் csv loder எழுதியவரே எனக்குப் பயிற்சி அளித்த வாய்ப்பு.
 2. நீங்கள் எனக்கு =b1&a1&c1 வாய்ப்பாடினைப் பயன்படுத்தி ஒரு சொல்லுக்கு முன்னும், பின்னும் அடைப்புக் குறிகளை இட கற்று கொடுத்தமை.
 3. notepad-ல் உள்ள தகவல்களை, open office calc மூலம், தேவையானபடி திறக்கக் கற்றுக் கொடுத்த விதம்
 4. எதிர் காலத்தில் நாம் அணுகவேண்டிய முறைகளை, தொலைப்பேசியில் அவ்வப்போது பேசி எனக்குள் இருந்த அச்சத்தையும், தயக்கத்தையும் நீக்கியது

எல்லாம் எனக்குள்ளிருந்து, இந்த வேகமானப் பதிவேற்றலுக்கு உதவியது. இன்னும் உங்களிடம் கற்க நிறைய உள்ளதாக நான் எண்ணுகிறேன். மாதம் ஒருமணி நேரம் எனக்காக ஒதுக்க இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் ஏறத்தாழ 1.5 இலட்சம் ஆங்கிலச் சொற்களுக்குள்ள மொழிபெயர்ப்புகள் உள்ளது.தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்திலிருந்து, மற்றொரு நண்பரால் ஒருங்குறியில் தரவிறக்கம் செய்துள்ளேன். இதில் இன்னும் வடிகட்டினால், குறைந்தது 5000-10000 சொற்களாவது கிடைக்கும். AWB இயக்க நேரமும் குறையும். மேலாட்டமாக அடைப்புகுறிகள் இட்டு, நமது பக்கத்தில் பதிவ செய்து, சிவப்புச் சொற்களை கவனித்து, அதிகம் இருக்கும் சொற்தரவுகளை மட்டுமே இதுவரை பதிவேற்றியிருக்கிறேன். இனி கீழ்கண்ட சல்லடைக் கிடைத்தால் நல்லது.

எனவே, இம்மாத இறுதிக்குள் vlookup கற்றுத் தரவும். என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அடுத்து தமிழ் சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் விக்சனரியில் தமிழ் சொற்களுக்கு பஞ்சம். பாவாணரின் நூல்களை படித்துக் கொண்டுள்ளேன்.அடுத்தமாதம் வரை படிப்பேன். பின் அக்டோபரில் ஆயுத்தப் படுத்தவேண்டும். வரும் தமிழ் புத்தாண்டு வரும் போது, விக்கி நண்பர்களுக்கு நம் விக்சனரியின் முன்னேற்றத்தை அறிவிக்க வேண்டும்.அநேகமாக 10வது இடத்திலிருந்து இன்னும் இரண்டு,மூன்று இடம் மேலே போகும். நீங்களும் இணைவீர்கள் என நம்புகிறேன். இது ஒரு கூட்டு முயற்சி. பிறகு இதுபற்றி பேசலாம். இப்போதைக்கு கைவசம் இருக்கும்,ஆங்கிலச் சொற்களை கொண்டு சலித்து, பதிவேற்ற வேண்டும். நீங்கள் சொல்லியவுடன், 1000 சொற்களை உடைய அட்டவணைச் செயலியை, vlookupசோதனைக்கு அனுப்புகிறேன். ஆவலுடன் கற்க, எதிர் நோக்கும், --17:17, 16 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Hotcat[தொகு]

Hotcat குறித்து, ஆலமரத்தடியில் கூறப்பட்டவைகளை பரணுக்கு மாற்றவிடலாமா? இதுபற்றிய தற்போதைய நிலை, எனக்குப் புரியாததால் தங்களிடம் கேட்கிறேன்.--06:07, 29 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மாற்றிவிடலாம். இப்போது எல்லாம் சரியாக இருக்கிறது.--சோடாபாட்டில்உரையாடுக 06:13, 29 சூலை 2011 (UTC)Reply

CSS-இல் நிறப்பட்டை[தொகு]

இங்கு உங்கள் நிரல்திறன் தேவை. ஆவலுடன்..--07:17, 1 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இன்னுமொரு வாரத்துக்கு கனரக விசயங்களிலிருந்து நான் அவுட் விக்கிமேனியா போகிறேன். வந்தபின் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:18, 1 ஆகத்து 2011 (UTC)Reply
 • விக்கிமேனியா பற்றி மின்னஞ்சல் அனுப்பவும். முடிந்தால், நேரம் இருக்கும் போது, அழைக்கவும். பேச விருப்பம். நன்றி. வணக்கம்--07:31, 1 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

விக்கி மேற்கோள்[தொகு]

sodabottle, விக்கி மேற்கோளை எவ்வாறு தொகுப்பது. அதில் பகுப்புகள் கிடையாதா? அதில் முதற்பக்கத்தில் 36 மேற்கோளென்று உள்ளது. ஆனால் 36க்கும் அதிகமாக இருக்கின்றனவே? குழப்பமாக இருக்கிறது.--தென்காசி சுப்பிரமணியன் 21:19, 11 ஆகத்து 2011 (UTC)Reply

பேச்சு:தமிழ் உறவுச் சொற்கள்[தொகு]

பகுப்பு பேச்சு:தமிழ் உறவுச் சொற்கள் மாற்றலாமா?--தகவலுழவன் 17:40, 14 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..Reply

/* விக்சனரி:தினம் ஒரு சொல் */ என்பதில் வழிமாற்று ஏன்?[தொகு]

வழிமாற்று செய்தாலும் கூட, ஆகத்து என்று வருவதில்லையே?ஆகஸ்ட் என்றே முதற்பக்கத்தில் தோன்றுகிறது. விக்கிப்பீடியாவிலும் கூட, அவ்வாறு கிரந்தம் ஏன் வருகிறது? இங்கு வழிமாற்றலை ஏன் செய்ய வேண்டும்? மற்றொன்று, இத்திட்டத்தில் கோர்க்கும் சொற்களில், ஏன் {{was wotd|2011|ஆகஸ்ட்|17}} ஏன் சேர்க்க வேண்டும்?--17:04, 16 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

1) முதற் பக்கத்தில் மாதப் பெயர்களுக்கு மீடியாவிக்கி மாறிகளைப் பயன்படுத்துகிறோம். அங்கு கிரந்தம் களையவில்லை. மீடியாவிக்கியில் முன்பொருமுறை கிரந்தம் களைந்தால் பல திட்டங்களில் பல இணைப்புகள் முறிந்து எக்கச்சக்க சிக்கலாயிற்று. அதனால் மீளமைத்து விட்டோம். எனவே முதற்பக்க இணைப்புக்கு கிரந்தத் தலைப்புத் தேவை. மேலும் மீடியாவிக்கி தமிழ் பதிப்பு அனைத்து திட்டங்களுக்கும் (விக்கி மற்றும் பிற) பொதுவானது. நம்மிஷ்டத்துக்கு கிரந்தமகற்றும் கொள்கையை அங்கு நடைமுறைப்படுத்த முடியாது. தற்போது மாதப்பெயர்கள் எங்கு வந்தாலும் இரு முறையிலும் வழிமாற்றுகள் உருவாக்கி விடுகிறேன். கிரந்தமகற்றுகிறேன் பேர்வழி என்று நாளை யாராவது ஒருவர் எங்காவது மாற்றினால் சிக்கல் வராமல் இருக்கவும், கிரந்தம் பயன்படுத்துவோர் எங்காவது இணைப்பு கொடுத்தால் அவை முறியாமல் இருக்கவும் இந்த ஏற்பாடு
2) ஒரு சொல் ஏற்கனவே முதற் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டது என்று உணர்த்துவதற்காக இந்த வார்ப்புரு. முன்னர் ஒரு முறை ஒரே சொல் இரு முறை முதற்பக்கத்தில் வந்து விட்டது. இதைத் தவிர்க்கவே இந்த வார்ப்புரு (பிற விக்கிகளும் இதனைப் பின்பற்றுகின்றன)--சோடாபாட்டில்உரையாடுக 17:59, 16 ஆகத்து 2011 (UTC)Reply

மிக்க நன்றி. நமது மீடியாவிக்கி css-இல் மாற்றங்கள் செய்துள்ளேன். உங்களின் மேற்பார்வை அதில் அவசியமென எண்ணுகிறேன்.--18:12, 16 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அகராதியின் இணைப்பு[தொகு]

கதிர்வேல் பிள்ளையின் அகராதியின் இணைய இணைப்பு இங்கு காண்க. --இராஜ்குமார் 08:07, 10 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நன்றி ராஜ்குமார்.--சோடாபாட்டில்உரையாடுக 08:10, 10 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தமிழ் ஒலிக்கோப்புகள் இணைப்பு[தொகு]

 • சோ.பா. தங்களின் தமிழ் ஒலிக்கோப்புகள் இணைப்பு கண்டு மிக மகிழ்ச்சி. அப்படி இங்கு சேர்க்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இவற்றை எங்கிருந்து பெறுகிறீர்கள்? பழ.கந்தசாமி 04:53, 17 திசம்பர் 2011 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியா பயனர் booradleyp நான்கு மாதங்களாக ஒலிப்பதிவு செய்து காமன்சில் ஏற்றி வருகிறார். இப்போது ஊடகப் போட்டி மூலமாக வேறு சிலரும் சேர்த்து வருகின்றனர். சுமார் 2600 சொற்களுக்குத் தயாராக உள்ளன. இன்னும் 1200 பதிவேற்றப்படாமல் உள்ளன. மொத்தம் 15,000 உருவாக்குவதாகத் திட்டமிட்டுள்ளோம். காமன்சில் இப்பகுப்பில் அவை அனைத்தும் உள்ளன. நான் இப்போது சோதனை முறையில் சேர்க்கத் தொடங்கியுள்ளேன். - awb பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய தடங்கல்கள், சிக்கல்கள் ஆகியவற்றை அறிவதற்காக. சிக்கல்களைக் கண்டறிந்தபின்னர் த.உழவனின் எந்திரன் கொண்டு மற்றவற்றைச் சேர்க்கத் திட்டம். இதற்காக ஒரு திட்டப்பக்கத்தை - விக்சனரி:ஒலிப்புக் கோப்புகள் திட்டம் வெள்ளோட்டமாக ஆரம்பித்துள்ளேன். இந்த முதல் கட்ட சோதனை முடிவடைந்த பின்னர் அதனை இற்றைப்படுத்தி ஆலமரத்தடியில் குறிப்பிடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:09, 17 திசம்பர் 2011 (UTC)Reply

ஊண் சோறு[தொகு]

ஊண் என்றாலும் மாமிசம் என்றொரு பொருளுண்டு "ஊண் [ ūṇ ] , (உண்) food , உணவு ; 2 . food of birds and beasts , இரை ; 3 . boiled rice ; 4 . experience of joys and sorrows by the soul , as the unavoi" Tamilcube online Dictionary.--Jambolik 14:49, 17 திசம்பர் 2011 (UTC)Reply

sodabot[தொகு]

உங்களின் தானியங்கி கணக்கு இருப்பதாக இங்கு கண்டேன். பயன்படுத்தக் கோருகிறேன். வணக்கம்.--20:37, 20 திசம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அதற்கு தானியங்கி அணுக்கம் இல்லையே :-). மேலும் நான் இப்போது awb மூலம் செய்யும் தொகுப்புகள் பாதிக்கு மேல் நேரடியாக மாற்ற வேண்டியுள்ளன (தொகுப்பு சுருக்கம் "using awb" என்று போடுகிறது, ஆனால் awb ஒரு உலாவி போலத் தான் பயன்படுத்துகிறேன்.). 10 இல் 5 அல்லது 6 இல் தன்னியக்கமாக ஒலிப்பு கோப்பு இணைக்க இயலுவதில்லை, உள்ளே வேறு ஏதேனும் மாற்றம் செய்து / கூடுதல் மாற்றங்கள் செய்து தான் இணைக்க இயலுகிறது. எனவெ இப்பணியை தன்னியக்கமாகச் செய்ய இயலும் என்று இன்னும் எனக்கு நம்பிக்கை வரவில்லை (ஒவ்வொரு பத்து தொகுப்புக்கும் மீண்டும் சரி பார்க்க வேண்டியுள்ளது). இவற்றை அண்மைய மாற்றங்களில் மறைக்கும் வண்ணம் “சிறிய தொகுப்”பாக அவற்றை செய்கிறேன் எனவே அங்கும் சிக்கல் வராது என எண்ணுகிறேன் --சோடாபாட்டில்உரையாடுக 04:05, 21 திசம்பர் 2011 (UTC)Reply
சரி பார்த்து பதிவேற்றும் நிலையை அறிந்தேன். விரிவான தங்கள் பதிலால், நடைமுறையை அறிந்தேன். நன்றி. வணக்கம்.--05:06, 21 திசம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சில சந்தேகங்கள்[தொகு]

வணக்கம் சோ.பா. தொகுத்த போது சில சந்தேகங்கள் ஏற்பட்டன, நீங்கள் விளக்கம் தந்தால் தெளிவடைவேன்:

1) Wiktionary Statistics பார்ப்பது எப்படி? சாதாரண பக்கங்களுக்கு கூட Wikipedia Stats உள்ளது. இங்கு ஒட்டுமொத்தமாக கூட ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. என் பக்கத்தில் இரண்டு links உள்ளன. ஆனால் இரண்டுமே defunct-ஆகிவிட்டன. உங்களுக்கு தெரிந்து வேறு ஏதேனும் உண்டா? இருந்தால் மக்கள் விருப்பம் பற்றி தெரிந்து ஒள்ளலாம் எனப் பார்த்தேன்.

2) ஏதேனும் ஒரு சொல் பகுதியை randomஆக சொடுக்கிய போது பல தவறுகளைப் பார்த்தேன். ஆங்கில எழுத்துக்கூட்டலில் பல தவறுகள் இருந்தன. அவற்றை நீக்குவது எப்படி? எங்கும் அந்த மாதிரி வசதி தெரியவில்லை எனக்கு. நானும் சில தவறான எழுத்துக் கூட்டல்களைப் பதிவு செயந்திருந்தேன். அதனையும் நீக்க முடியவில்லை :(

1) total stats page : [1] இது ஒரு மாதத்துக்கு ஒரு முறை இற்றையாகும். 20-22 ஆம் தெதி வாக்கில் முந்தை மாதத்துக்கான தரவுகள் இற்றையாகும். page view stats - [2]
individual user edit counters : [3] [4] [5] இதில் பயனர் பெயர்களை மட்டும் மாற்றி விடுங்கள். இவற்றில் சில அவ்வப்போது உடைந்து போகும். என் பங்களிப்புகள் பக்க footerஇல் மேலும் சில edit counter களை சேர்க்கிறேன்
 • மிகவும் நன்றி. நான் இதைபோல ஏதேனும் இருக்கும் என எதிர்பார்த்தேன்: (outdated) Tamil Wiktionary Statistics. நீங்கள் கொடுத்தவையும் பயனுடயன.
2) தவறான எழுத்துக் கூட்டல்களை பார்த்தால் அவற்றை மேல் மெனுவில் உள்ள “நகர்த்துக” இணைப்பின் மூலம் சரியான தலைப்புக்கு நகர்த்தி விடுங்கள். அல்லது சரியான எழுத்துக் கூட்டல் பக்கத்தை தனியாக உருவாக்குங்கள். பின்னர் பிழையான பக்கத்தில் {{delete}} என்ற வார்ப்புருவை சேர்த்து விடுங்கள். நிருவாகிகள் யாராவது நீக்கி விடுவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:37, 20 சனவரி 2012 (UTC)Reply
 • அவ்வாறே செய்கிறேன், நன்றி :)

How to merge the different user pages and talk pages?[தொகு]

I have started contributing in various forms of wikipedia, how to merge all the talk pages and user pages? It is very difficult to manage all of them. Kindly help me.

One more thing, i would like to join in wikipedia india chapter, how to do that, what is the procedure for the same?

1) cant merge user and talk pages in different wiki projects/languages. it is by deliberate feature that they have been kept separate. However you can choose one user page as the main user page and redirect others to it.
2) fill up a application, pay a 100 rs fee. thats about it. instructions here--சோடாபாட்டில்உரையாடுக 08:35, 6 பெப்ரவரி 2012 (UTC)

Thanks for the information. How to redirect user pages ?

If you want your user page to point to your en wiki user page put #redirect[[:en:w:user:Dineshkumar Ponnusamy]] there.--சோடாபாட்டில்உரையாடுக 14:54, 6 பெப்ரவரி 2012 (UTC)

ஒலிக்கோப்புகள் சேர்ப்பதற்கு நன்றி[தொகு]

மீண்டும் ஒலிக்கோப்புகளை முனைப்புடன் சேர்த்து வருவதற்கு உங்களுக்கு நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 15:34, 9 சூன் 2013 (UTC)Reply

:-)--சோடாபாட்டில்உரையாடுக 16:04, 9 சூன் 2013 (UTC)Reply

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:06, 3 சூலை 2014 (UTC)Reply

Your administrator status on ta.wiktionary[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 02:42, 13 சூன் 2017 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sodabottle&oldid=1639941" இலிருந்து மீள்விக்கப்பட்டது