பேச்சு:பொருள்மயக்கம்
தலைப்பைச் சேர்Appearance
பழ.கந்தசாமி, இங்கே "ambiguation" என்னும் சொல்லை வேண்டுமென்றே இட்டேன். விக்கியில் "disambiguation" என்னும் சொல் அடிக்கடி வருவது உங்களுக்குத் தெரியும். அச்சொல்லுக்கு "பொருள்மயக்கம் தீர்த்தல்", "தெளிவாக்கல்" என்று பொருள் கொடுத்து இடுகை செய்ய எண்ணினேன். எனவே, "பொருள்மயக்கம்" என்னும் இடுகைக்கு ஆங்கிலத்தில் "ambiguity" என்பதோடு "ambiguation" என்னும் சொல்லையும் இணைப்பது பொருத்தம். அதோடு, "சட்டவியல்" என்னும் பகுப்பையும் சேர்த்தல் நலம். ஏனென்றால் "ambiguation" சட்டத் துறையில் பயன்படும் சொல். நன்றி! --பவுல்-Paul 03:17, 13 பெப்ரவரி 2012 (UTC)
- ambiguation என்ற சொல் dictionary.com தளத்தில் இல்லையென்பதால் அவ்வாறு மாற்றினேன் எனினும், அது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கிறது. அதனால், ambiguation என்ற பொருளையும் சேர்க்கலாம். ambiguation என்பது பொருள்மயக்கம் என்பதைவிட பொருள்மயக்கமேற்படுத்தல் என்பதுபோல் வரும் என நினைக்கிறேன். நன்றி. பழ.கந்தசாமி 03:47, 13 பெப்ரவரி 2012 (UTC)
- நன்று. ambiguate என்றும் ஒரு (வினைச்) சொல் இருப்பதால் அதற்கு "பொருள்மயக்கம் ஏற்படுத்தல்" என்னும் பொருள் கொடுக்கலாம். ambiguation பெயர்ச்சொல்லாக, "பொருள்மயக்கம்" என்றே இருக்கலாம். --பவுல்-Paul 04:06, 13 பெப்ரவரி 2012 (UTC)
- ஆம், பெயர்ச்சொல்லுக்குப் பொருள்மயக்கம் என்பது சரியானது. வினைச்சொல் பலவிதமாகக் கொடுக்கலாம், ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருபொருள்நிறம் தரும். பொருள்மயங்கு, பொருள்மயக்கு, பொருள்மயக்கங்கொள்(தல்), பொருள்மயக்கமேறு(தல்), பொருள்மயக்கமுறு(தல்), பொருள்மயக்கமடை(தல்).. இப்படியாக..--செல்வா 04:57, 14 பெப்ரவரி 2012 (UTC)
Start a discussion about பொருள்மயக்கம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பொருள்மயக்கம்.