உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
1. Mouth; beak of birds;*** 2. Mouth as of cup, bag, ulcer, etc.;*** 3. Mouthful;*** 4. Lip;*** 5. Edge, rim;*** 6. Edge, as of a knife;*** 7. Word;*** 8. Speech utterance;*** 9. Voice, tone;*** 10. Cf. வாய்-மை Truth;*** 11. cf. வாய்ப்பு. Excellence;*** 12. cf. வாய்ப்பு. That which is excellent;*** 13. Opening; gate;*** 14. Way path;*** 15. Means;*** 16. Agency, instrumentality;*** 17. Place;*** 18. Graduated mark on a steelyard;*** 19. Scar;*** 20. Hole; orifice;*** 21. cf. வேய். Flute, musical pipe;*** 1. (Gram.) A sign of the locative case;*** 2. A particle of comparison; உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு. (பிங்.) கயவர்வா யின்னாச் சொல் (நாலடி, 66).*** பாத்திரம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம். வாயில்லை நாமங்கள் செப்ப . . . முத்திபெற்ற தென்னோ தயிர்த்தாழியுமே (அஷ்டப். திருவரங். மாலை, 53). புண்வாய் கிழித்தன (பெருந்தொ. 701).*** வாய்கொண்ட வளவு. நாலுவாய் உண்டான்.*** உதடு. வாய்மடித்துரறி (புறநா. 298). (நாமதீப. 587.)*** விளிம்பு. பொன்னலங்கல் . . . வாயருகு வந்தொசிந்து (சீவக. 595).*** ஆயுதத்தின் முனை. கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து (பொருந. 242).*** மொழி. வணங்கிய வாயினராத லரிது (குறள், 419).*** வாக்கு. (அக. நி.) பண்டேயுன் வாயறிதும் (திவ். திருப்பா. 15).*** குரல். வாயுடை மறையவர் (திவ். நாய்ச். 1, 7).*** மெய்ம்மை. பொய்சேணீங்கிய வாய் நட்பினையே (மதுரைக். 198). (பிங்.)*** சிறப்பு. முறியினும் வாயது (குறுந். 62).*** சிறப்புடைப் பொருள். மடவோன் காட்சி வாயன்று (ஞானா. 10).*** வாசல். நரகவாய் கீண்டாயும் நீ (திவ். இயற். 3, 47).*** வழி. பெரியார்நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு (ஏலா. 23).*** உபாயம். அது தணிக்கும் வாய்நாடி (குறள், 948).*** மூலம். தூதர்வாயிலிட்டு நீட்டுகையு மன்றிக்கே (ஈடு, 10, 10, ப்ர.).*** இடம். கொக்கின் மென்பறைத் தொழுதி . . . எவ்வாயுங் கவர (நெடுநல். 17).*** துலாக்கோலின் வரை. (G. sm. D. I, i, 284.)*** தழும்பு. வாள்வாயுமின்றி வடிவெங்கணை வாயு மின்றி (சீவக. 454).*** துவாரம். (யாழ். அக.)*** வாத்தியக் குழல். (சூடா.)--part.*** ஏழனுருபு. (நன். 302.) கங்குல் வாய் (திவ். திருவாய். 5, 4, 7).*** ஒர் உவமவுருபு. தீவாய்செக்கர் (கல்லா. 42, 20).

---- உழவன் (Info-farmer)+உரை.. 05:41, 3 ஆகத்து 2015 (UTC) Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வாய்&oldid=1325690" இலிருந்து மீள்விக்கப்பட்டது