வாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
7 வாய்களைக் கொண்ட பானை (இசைக்கருவி)
7 வாய்களைக் கொண்ட பானை (இசைக்கருவி)
வாயின் தசையமைவுகள்
பொருள்

வாய் (பெ)

  1. உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி.
  2. இது மாந்தரின் உடலின் உணவுப்பாதையின் தொடக்கப் பகுதி.
  3. ஒலியெழுப்ப, மொழி பேசப் பயன்படும் உறுப்பு.
  4. புண்ணின் வாய் (புண்ணின் திறந்துள்ள பகுதி; பாம்பு முதலிய கடித்துவிட்டால் கடிபட்ட இடம், கடிவாய்
  5. ஏதொன்றும் தொடங்கும் இடம், தோற்றுவாய்
  6. பானை, ஏனம், பாத்திரம் போன்றவற்றின் திறந்த பகுதி.

வாய் (வி) (வாய்க்க, வாய்த்த)

  1. ஒன்று தற்செயலாக நிகழ்வதைக் குறிக்கும் வினை, வாய்த்தல் என்னும் வினை.
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

வாய் - வாய்ப்பு - வாய்மை
வாய்க்கால், வாய்ப்பந்தல்,
வாயாடி, உளறுவாயன், ஆபாசவாயன், திமிறுவாயன், திணறுவாயன், திக்குவாயன், ஓட்டைவாயன், நல்லவாயன், நாறவாயன்
திக்குவாய், திக்குவாயன்
வாய்மொழி, வாய்ச்சொல், வாய்ப்பேச்சு, வாய்ப்பாட்டு
வாயாடு, வாயசை
வாயில், நுழைவாய், நுழைவாயில்
கால்வாய், எழுவாய், வருவாய், தோற்றுவாய், கழுவாய்
கக்குவாய்
ஆசனவாய், மலவாய்
பொக்கைவாய்
எருவாய், கருவாய்
கடைவாய்ப்பல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்&oldid=1913886" இலிருந்து மீள்விக்கப்பட்டது