பேச்சு:வீ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

"நன்றாக மலர்ந்து விழுந்த மலர் " என்னும் பொருள் எங்கிருந்து பெற்றது? வீ என்றால் முழுநிறைவெய்திய மலர் என்பதாகப் புரிந்து கொண்டுள்ளேன். வீ என்பதே ஒரு வினைச்சொல்லாக ஏவல் பொருளில் சொல்ல இயலும். வீ என்றால் விரி, பரு, வீசு என்பது போன்ற வினைச்சொலாகப் பயன்படுவது. முழுவதும் மலர்ந்த மலர், அதன் இதழ்கள் உதிரும் நிலையில் உள்ள மலர் என்பதை வீ என்பதாகப் புரிந்துகொண்டுள்ளேன். உதிர்ந்தபூஎன்றும் பொருள் கொள்ள இடம் உண்டு, ஏனெனில், போதல், அழிதல் போன்ற பொருள்களும் சுட்டும். இலக்கியங்களில் வீ என்னும் சொல் எப்படியெல்லாம் ஆளப்பட்டுள்ளது என்று அறிய வேண்டும். உதிர்ந்த மலருக்குத் தமிழில் செம்மல் என்று பெயர் என்பது எனக்குத் திண்ணமாகத் தெரியும்.--செல்வா 17:16, 26 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வீ&oldid=1331202" இலிருந்து மீள்விக்கப்பட்டது