பேச்சு:അടിപൊളി
தலைப்பைச் சேர்இது மலையாளத்தில் காணப்படும் சிறப்பு வார்த்தை. என்ன செயலெல்லாம் அடிபொளி என்றால் என்ன சிறப்பாக இருந்ததா/அமைந்ததா என்றப்பொருள். ஆனால், தமிழில் இன்று நாம் ஆங்கில மோகம் என்றப் பெயரில் என்ன superaa... தமிழர்களே இதெல்லாம் நல்லதுக்கே அல்ல. இவையெல்லாம் அழிவின் வெளிப்பாடு. நாம் மொழியைச் சிதைக்க நம் பண்பாட்டை, நம் ஒழுக்கத்தை, நம் அடையாளத்தைச் சிதைக்கிறோம். வார்த்தை உருவாக்கமே உணர்த்தும் இவ்வார்த்தை தமிழுக்கு நெருங்கியதென்று. இதேப்போல் கொள்ளாம் என்னும் வார்த்தையும் வழக்கத்தில் இருக்கிறது. இது ஒருப் பொருளோ செயலோ சிறப்பாக இருந்தால் அதை கொள்ளாம் எனப் பாராட்டுகின்றனர். அது அவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்றப் பொருள் தருகிறது. நாம் உச்சரிப்பு எது மொழி எது என்று தெரியாமல் பல வார்த்தைகளை இழந்துவிட்டோம். நாம் உச்சரிப்பைத் தவறியதால் இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கின்றனர் - மலையாளம் என்பது தமிழின் பிழை மொழியென்று. இவர்கள் உரைக்கின்றனர் 80% சமற்கிருதம் நிரைந்திருக்கிறதாம். ஆனால், வேர்ச்சொற்கள் பல தமிழின் தாக்கத்தைக் கொண்டுள்ளது. இருப்பதிலேயே சிரமமான மொழி மலையாளம். ஏனெனில் இதில் தமிழில் உள்ள ழ, ள கரமும் இருக்கிறது, வடமொழியில் உள்ள க, kha, ga, gha, ங வும் இருக்கிறது. இவர்கள் இதைப் பற்றி கவலைக்கொள்ளாது தன் மொழியேச் சிறப்பெனப் போற்றி வருகின்றனர். இதில் எழுத்துக்களைக் கணக்கெடுத்தால் தமிழை விட மூன்று மடங்கு நீண்டுச்செல்லும். ஆனால், இவர்கள் யாரும் உரைப்பதில்லை. மலையாளம் வளர்ச்சியுறாமல் இருப்பதற்கு இத்தனை மிகுதியான எழுத்துக்களே என்று. இவர்கள் உச்சரிப்பில் பிழைக்காணப்பட்டால் வார்த்தையின் பொருளே மாறும். இவர்களுள் உச்சரிப்புப் பிழைக்காண்பதரிது. இவர்கள் ழ, ற கரத்தையும் சிறப்பாகக் கண் இமைப்போல் பார்த்துக் கொள்கின்றனர். முடிந்தவரை வார்த்தை உருவாக்கத்திலும், பழைமையிலும் இதைப் புகுத்தி அடுத்தத்தலைமுறைக்கு எடுத்துச்செல்கின்றனர். ஆனால், தமிழர்களாகிய நம்மில் பலருக்கு ழ, ள, ல, ற, ர, ந, ண, ன எவ்வாறு வேறுபடுத்தி உச்சரித்தல் என்பது தெரியாது. இதில் பெரும்பாலான எழுத்துக்கள் நமக்கேச் சொந்தமானவை. இதிலும் கொடுமை ச வில் ஸ உச்சரிப்பைப் புகுத்துவது. என்னையா நடக்குது அழகுத்தமிழில் - மொழிச்சிதைவா அல்லது ஒட்டுமொத்த இனச்சிதைவா. நீங்களே எண்ணிப்பாருங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 19:31, 21 அக்டோபர் 2011 (UTC)
- அருள் கூர்ந்து பேச்சுப்பக்கத்தை விக்சனரி குறித்த விசயங்களைப் பற்றி மட்டும் இட பயன்படுத்துங்கள்/ அறிவுரை வழங்கல்கள்/ வலைப்பதிவு போன்ற பதிவுகள் இங்கு வைக்க வேண்டாம், உங்கள் பயனர் பக்கத்தில் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:43, 22 அக்டோபர் 2011 (UTC)
- கண்டிப்பாக அதையே பின்பற்றுகிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:59, 22 அக்டோபர் 2011 (UTC)