உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:christianism

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கிறித்தவ சமயத்தைக் குறிப்பதற்கு christianity என்னும் சொல்தான் வழக்கமாக உள்ளது. christianism என்னும் சொல் கிறித்தவத் தீவிரவாதம் என்னும் பொருளில் சிலரால் அண்மைக் காலத்தில் புகுத்தப்பட்டது.

அதுபோலவே, islamism என்னும் சொல்லும் தீவிர இசுலாமியப் போக்கைக் குறிக்க மட்டுமே வழங்கப்படுகிறது. இசுலாமிய சமயம் islam என்றிருக்க வேண்டும்.

விக்சனரி வழிகாட்டிகள் இத்திருத்தங்களைச் செய்யும்படி வேண்டுகிறேன். நன்றி!--George46 01:23, 28 ஏப்ரல் 2010 (UTC)

  • நீங்கள் இங்கு கூறிய கருத்து சிந்திக்கத் தக்கதே. எனினும், ஆங்கில விக்சனரி மற்றும் பிற இணைய ஆங்கில அகரமுதலிகளின் கருத்தினையே மொழிபெயர்த்துள்ளேன். அதற்கான இணைப்புகளையும் இணைத்துள்ளேன். christian/islamic fundamentalism என்பதற்கே, உங்களின் கருத்து பொருந்துமெனக் கருதுகிறேன்.த*உழவன் 03:57, 28 ஏப்ரல் 2010 (UTC)
  • christianisme என்று ஃபிரஞ்சு மொழியில் உள்ளது ஆங்கிலத்தில் christianity என வரும். இலத்தீன் மொழியில் christianismus என வருவதை 500 ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்திய, ஆனால் தற்காலத்தில் வழக்கொழிந்த (obsolete) "christianism" என்னும் சொல்லால் குறிப்பது சரியல்ல. இந்த இணைப்பைப் பாருங்கள்: [1]. அதில் வரும் obsolete என்னும் சொல்லையும் கவனியுங்கள். "மதறாஸ்" என்றொரு பழைய பெயர் இருந்தாலும் கூட, "சென்னை" என்னும் தலைப்பில்தான் கட்டுரை எழுதுவோம்.

christianism என்னும் சொல் இன்றைய ஆங்கில மொழி வழக்கில் "தரக்குறைவான" பொருளில் பயன்படுவதை அறிய, காண்க: விக்கி கட்டுரை - [2].

உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். --George46 04:24, 28 ஏப்ரல் 2010 (UTC)

  • த*உழவன் அறிய, christianism பக்கத்திலுள்ள படிமங்களை christianity பக்கத்துக்கு மாற்றினால் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு, கிறித்தவம் என்பதற்கு நேர் பெயர்ப்பாக christianity அமையும். இரு சொற்களுக்கும் உரிய, சுருக்கமான கருத்தையும் உசாத்துணையையும் நான் உள்ளீடு செய்ய முன்வருகிறேன். --George46 04:45, 29 ஏப்ரல் 2010 (UTC)


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. ஆங்கில விக்கிக்கட்டுரைகளையும், அங்குள்ள கட்டுரையை விடப் பெரிதாக இருக்கும், உரையாடற்பக்கத்தினையும் படித்தேன்.தற்போதுள்ள பொருளை அறிந்தேன். அதன்படி, இங்கு வழக்கில் இல்லாத என்பதனையும் இணைத்து விட்டேன்.
  2. விக்கிப்படங்களை மாற்றிவிட்டேன். மிகச்சரியெனப்படுவதை நீங்களே மாற்ற வேண்டுகிறேன்.
  3. நான் ஒரு விக்கி ஆர்வலன். எத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றவனல்ல.மதங்களைப் பொறுத்தவரை, எம்மதமும், சம்மதம் என்பதே எனது எண்ணம். ஆசாமிக்குள்ளே, சாமியை இரசிப்பவன். ஆசாமிக்குள்ளே, சாமியாடலை வெறுப்பவன். என்னுடன் தங்களின் உயரிய நேரத்தினைப் பகிர்ந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கிறேன்.
  4. இயேசு சபையை- Jesuit தமிழ் விக்கிப்பீடியாவில் கண்டேன். நீண்ட நாட்களாக அதனை ஒரு தமிழில் முழுவரலாற்று ஆவணமாக எழுத நினைத்திருந்தேன். அச்சபையிலிருந்து கிளம்பி உலகமெங்கும் கல்வி பரப்பிய ஆசாமிகளைJesuits எழுத, உங்களுடன் இணைய விரும்புகிறேன். உலக மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டிய கட்டுரைகள் அவை என கருதுகிறேன். நன்றி.வணக்கம்.த*உழவன் 07:20, 30 ஏப்ரல் 2010 (UTC)

இயேசு சபை

[தொகு]

த*உழவன் அவர்களுக்கு, வணக்கம்! christianism, christianity குறித்து நான் எழுப்பிய ஐயத்தைத் தீர்த்தமைக்கு நன்றி! அந்தப் பதிகைகளைச் செம்மைப்படுத்துகிறேன். இயேசு சபை பற்றிக் கேட்டீர்கள். அப்பொருள் குறித்த ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் மிக நீண்டு உள்ளன. அவற்றைச் சுருக்கியும் தேர்ந்தும் தமிழில் பெயர்த்தால் பலர் பயன்பெறுவர். இயேசு சபைத் தமிழ்ப் பதிகையை மணியன்தான் தொடங்கினார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்கி கட்டுரையை மெருகூட்டுவதில் துணைபுரிந்தேன். கிறித்தவமும் கிறித்தவ வரலாறும் என் ஆய்வுத்துறைகள். ஆகவே அவை தொடர்பாக என்னால் இயன்ற உதவி செய்வதில் பெருமகிழ்ச்சி.

மற்றொரு வேண்டுகோள்: இரு வாரங்களுக்குமுன் கிறித்தவ சொற்கள் கொண்ட அகராதி (1909) உங்களிடம் உள்ளதாகவும் அச்சொற்களை மொழிபெயர்க்க உதவ முடியுமா என்றும் கேட்டிருந்தீர்கள். அது தொடர்பாக நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கிடைத்ததா? பதில் காணோமே (காண்க: பயனர் பேச்சு-george46). முகவரிதான் சரியில்லையோ?

தமிழ் விக்சனரிக்கு எல்லாத் துறைகளிலும் மிகச் சிறப்பான, தரமான பங்களிப்புகள் நல்கி வருகின்றீர்கள். பாராட்டுகள்! --George46 14:58, 30 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:christianism&oldid=638589" இலிருந்து மீள்விக்கப்பட்டது