பேச்சு:coral
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
பவழம் என்பதே தமிழில் பண்டுக்காலம் முதல் காணப்பட்டவை. நாளடைவில் தமிழர்களின் பேச்சு உச்சரிப்பு வழுவால் பவளமானது. இது வழுவாகும். இதை இப்போதே மாற்றாவிட்டால் பிற்காலத்தில் தமிழும் தமிலாக/தமிளாக மாறும். சான்று பண்டைத்தமிழில் நிலவிவந்த வார்த்தைகள் மாற்றமடையாமல் பல சொற்கள் மலையாளத்திலும் காணப்படுகின்றன. அம்மொழியில் പവിഴം (பவிழம்) என்று வழங்கிவருதலைக் காணலாம். இது ஆரோக்கியமான மொழியின் வளர்ச்சிக்கு அறிகுறியாய்த் தோன்றவில்லை. தயைக்கூர்ந்து தமிழில் வழுவாக மாறிவரும் உச்சரிப்பைத் திருத்தும் பொருட்டு பவழம் என மாற்ற உதவுங்கள். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 10:31, 17 அக்டோபர் 2011 (UTC)
- பிழை என்று ஒதுக்க இயலாது. பிழையே பழக்கத்தில் இருந்தால், பயன்பாட்டு அங்கீகாரம் பெறுகிறது. விக்கிப்பீடியா போன்ற இடங்களில் பயன்படுத்தும் போது பழைய முறையைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு அகரமுதலியில் இரண்டும் இடம் பெற வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 17 அக்டோபர் 2011 (UTC)