பேச்சு:coronal suture
தலைப்பைச் சேர்கீரிடப் பொருத்து என்று அழைக்கலாம், suture என்பதனை மண்டையோட்டில் பொருத்து என அழைப்பது சிறப்பாக உள்ளது. suture (of the skull bone) --சி. செந்தி 20:40, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- உச்சிப் பிணைப்பு எனலாம். கிரீடம் என்பது வேண்டாம், அதன் பொருளும் வேறு. உச்சி மண்டைக்கும், அதன் வளைவுக்கும் தமிழில் பெயர் இருக்கவேண்டும். மண்டை என்றலும் மண்டையோட்டின் மேலே குவிந்த பகுதியைத்தான் குறிக்கும். ஆகவே மண்டைப் பிணை/வு என்றும் கூறலாம்.--செல்வா 20:54, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்றி, ஆனால் sagittal suture என்றும் ஒன்று உண்டல்லவா, அதனை மேல் வகிட்டுப் பொருத்து என்று மொழிபெயர்த்துள்ளேன், இதுதான் உச்சிப் பிணைப்பு என்பதற்கு உகந்தது என்று நினைக்கிறேன், ஏனெனில் இது நிலைகுத்தாக சரியாக மண்டையின் நடுப்பகுதியில் (படத்தில் இல. 2) அமைகிறது, coronal suture (படத்தில் இல. 1) கிடையாக அமைகிறது. மேலும் (பிற்கால மொழிபெயர்ப்புக்களில் தேவைப்படும்) மருத்துவத்தில் corona என்னும் (corona radiata) சொல் வருகிறது, இது முடி, மகுடம் போன்றவற்றை சுட்டுகிறது. எனினும் coronal என்றால் குறுக்காக என்று த.இ.ப சொல்கிறது.
corona : http://www.thefreedictionary.com/Corona
suture என்பதனை பொருத்து என்பதா பிணைப்பு என்பதா? ஏனெனில் அனைத்து suture-ற்கும் பொதுவான சொல் தேவை.
படத்தில் பார்த்தால் கிடையாக முன்னுக்கும் பின்னுக்கும் பிணைப்புகள் உண்டு, 1 - coronal suture , 3 -lambdoid suture (கிரேக்க இலம்டா எழுத்துரு வடிவப் பிணைப்பு), எனவே முன் கிடைப்பிணைப்பு, பின் கிடைப்பிணைப்பு போன்று அழைக்கலாம், எனினும் அதுவும் சிறப்பாகத் தோன்றவில்லை..--சி. செந்தி 21:44, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
கருத்து
[தொகு]ஆ! இதுபோல ஒருபடம் ஓராயிரம் சொற்களுக்கு ஈடு!! இந்த பிணை நெளிவரிகள் உள்ளங்கை வரிகள் போலும், விரல் சுரிகள் போலும் தனித்தன்மை வாய்ந்தது என்று முன்பொரு முறை படித்திருக்கின்றேன். ஒரு முழு நூலே இந்த மண்டை ஓடுகளின் பிணைப்புகளைப் பற்றி முன்னர் பார்த்திருக்கின்றேன். செந்தி நாம் முதலில் செய்ய வேண்டியது மூன்று ஒன்றுக்கொன்றான செங்குத்தான வெட்டுதளங்களுக்குச் சீரான பெயர்கள் தேர்வது.
- Transverse plane = குறுக்குவெட்டுத் தளம்
- Sagittal plane = முன்பின் நெடுக்குவெட்டுத்தளம் (சுருக்கமாக முன்பின் தளம்); அல்லது மூக்குப்பிடரி தளம்
- Coronal plane = இருசெவி நெடுக்குவெட்டுத் தளம் (சுருக்கமாக இருசெவிதளம்)
நீங்கள் காட்டும் லாம்பாய்டு என்பதை முன் கவட்டு, பின் கவட்டுப் பிணைப்பு என்று சொல்லலாம். கவடு என்பது Y போன்ற வடிவம்தான். கவடு பிடிக்கவில்லை என்றால், கவர், கப்பு, கவை முதலான சொற்களில் ஒன்றைத் தேர்ந்துகொள்ளலாம்.கவர் என்றால், ஒன்று இரண்டு கிளையாகப் பிரிவது எனவே Y போன்று தோன்றும். அடுத்து பொருத்து என்னும் சொல் சரியானதுதான், ஆனால் பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்துவது முற்றிலும் நிறைவு தரவில்லை. எனினும் சொல்லலாம் என நினைக்கின்றேன். --செல்வா 00:16, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
- இவற்றைச் சுருக்கமாக மூக்கு நெடுவெட்டு, செவி வெட்டு, குறுக்குவெட்டு எனலாமா?--
- சில இடங்களில் இந்த சுருக்கமான சொற்கள் பயன்படாமல இருக்கலாம். சொரொனல் என்பதை இட-வல நெடுவெட்டு என்றும் சொல்லலாம். எனவே சுருக்கமாகச் சொல்ல, முபி-வெட்டு, இ-வ வெட்டு, குறுக்கு வெட்டு என்பது பொருந்தும்.மேலே மண்டையோட்டில்ல் காணப்படும் பொருத்து/பிணைப்புக்கு கரோனல் என்பதை இடவல எனலாம் அல்லது செவி/காது எனலாம். --செல்வா 13:11, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
- இவற்றைச் சுருக்கமாக மூக்கு நெடுவெட்டு, செவி வெட்டு, குறுக்குவெட்டு எனலாமா?--
செல்வா 00:19, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
sagittal பற்றிய ஆய்வு
[தொகு]நன்றி உங்களுக்கு, ஆம்..plane (தளம்) பற்றி முதலில் பார்த்தல் நல்லது.
- sagittal [ˈsædʒɪtəl] http://www.thefreedictionary.com/sagittal
adj
- 1. resembling an arrow; straight
- 2. (Life Sciences & Allied Applications / Anatomy) of or relating to the sagittal suture
- 3.(Life Sciences & Allied Applications / Anatomy) situated in a plane parallel to the sagittal suture
- sagittal என்றால் நேரான என்கின்ற அர்த்தத்திலும் எடுக்கலாம், அதன் இன்னுமொரு அர்த்தம் அம்பு உரு போன்ற (arrow like), ஆயினும், sagittal plane உடலை இரு சமச்சீர்க் கூறுகளாகப் பிரிக்கிறது, sagittal plane, sagittal suture ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டு வருகின்றது.
த.இ.ப மொழிபெயர்ப்பு
[தொகு]* இயற்பியல். அம்புருத் தளம் * மருத்துவம். வகிட்டு வசம்
மருத்துவத்தில் ஓரே சொல் வெவ்வேறு இடங்களில் பயன்படுவதால் இதற்கு ஒரு பொதுவான பெயர் இருத்தலே நல்லது எனக் கருதுகிறேன், பின்வரும் சொற்களைப் பார்த்தால், sagittal sulcus, superior sagittal sinus என்பன sagittal suture அமைந்துள்ள இடத்தின் அருகே அமைந்துள்ளது, http://ta.wikipedia.org/wiki/நுதலெலும்பு பற்றிய பக்கத்தில் இவற்றிக்கு முறையே உச்சி வகிட்டுக்குழி, மேல்(superior) வகிட்டுக் (sagittal) காற்றுக்குடா (sinus) எனக் குறிப்பிட்டேன், எனினும் இவை காலப்போக்கில் சரியான சொல் தெரிவு செய்யப்படும் போது மாற்றப்படலாம்.
இவற்றை நிலைக்குத்து, கிடையான என்னும் நோக்கில் அழைத்தால் பொருந்துமா? மூக்கு நெடுவெட்டு, செவி வெட்டு என்பன கலைச்சொற்கள் போன்ற தோற்றப்பாட்டை என்னைப்பொறுத்தவரை தரவில்லை, மேலும் பிழையான விளக்கத்தை உருவாக்கலாம்.
எனவே sagittal plane என்பது (உச்சி) வகிட்டில் வெட்டப்படும் ஒரு தளம் என்பதால் எனது பார்வையில், இதனை வகிட்டுத் தளம் என்றும் அழைக்கலாம் எனக் கருதுகிறேன். எனினும் நீங்கள் பரிந்துரைத்த முபி-வெட்டு, இ-வ வெட்டு, குறுக்கு வெட்டு போன்றவையும் "தளம்" என்று கருதப்படுகையில் சரியாக அமைகிறது, ஆனால் "பிணைப்பு/பொருத்து" எனக் கருதும் போது யோசிக்கவேண்டும்.--சி. செந்தி 17:36, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
இறுதி நிலைப்பாடு
[தொகு]
Sagittal plane |
முன்பின் நெடுக்குவெட்டுத்தளம் |
வகிட்டுத் தளம் |
|
Sagittal suture | வகிட்டுப்பிணைப்பு | ||
Coronal plane | இருசெவி நெடுக்குவெட்டுத் தளம், இட-வல நெடுவெட்டு | கிடைத்தளம் | |
Coronal suture | இடவல, செவிப் பிணைப்பு | முடிப்பொருத்து | |
Lambdoid suture | கவைப் பிணைப்பு/ பொருத்து | ||
Sagittal sulcus | வகிட்டுக் குழி | வகிட்டுக் கால்வாய் | |
Corona radiata |