பேச்சு:d.c.generator

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நோமின்னா நேர்மின்னா ?[தொகு]

"நோமின் ஆக்கி" என பொருள் காட்டப்பட்டுள்ளதில் "நோமின்" எனக் காணப்படுவது "நேர்" என்பதை தவறுதலாக "நோ" என ஓர் எழுத்துப்பிழையாக ஆக்கப்பட்டுவிட்டதோ என ஐயப்படுகிறேன்.

விக்சனரியில் "நேர்மின்" என்னும் சொல்லைத் தேடினால் பல இடங்களில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஆனால் "நோமின்" எனும் சொல்லைத் தேடினால் இந்தத் தலைப்பின் கீழும் மற்றும் வேறு 6 தலைப்புகளின் (rotating anode, direct supply, anode characteristics rays, anodic oxidation, electropositive nature, anodize) கீழும் மட்டும் காணப்படுகின்றன.

தமிழ் விக்கிப்பீடியாவில் "நோமின்" என்னும் சொன்மை எங்கும் காணப்படவில்லை. மாறாக இத்தலைப்புத் தொடர்பான நுதல்பொருள்கள் பலவற்றில் "நேர்மின்" எனவே பல இடங்களில் காணப்படுகிறது.

ரகரவொற்றுக்குப்பதில் தமிழக வழக்கில் கால் மற்றும் இலங்கை வழிக்கில் அரவு எனப்படும் உயிரொலிக்குறியை தவறுதலாக எடுத்துக்கொணட விபத்து நடைபெற்றுளதா? அல்லது "நோ" என்னும் முன்னொட்டும் தேவையான பொருண்மை கொண்டதா?

--கா. சேது (பேச்சு) 15:19, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். நீண்ட வருடங்களுக்குப் பிறகே, இப்பக்கத்தினைக் கண்டேன். ஆழமான சிந்தித்தமைக்கு நன்றி. "direct" என்பதை மொழியாக்கம் செய்தால், 'நேர்' என்றச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள். எனவே, இது ஒற்றுப்பிழையே. உங்களுக்குத் தெரியுமென்றாலும், பலவித எண்ணங்களைத் தூண்டியமைக்கு நன்றி. இனி இதுபோன்றப் பிழைகளைக் கண்டால், நீங்களே திருத்தி , இதுபோன்ற தானியங்கிப் பிழைகளை நீக்கிக்கோருகிறேன். அல்லது ஆலமரத்தடியில் இட்டால் பலர் உடன் காண வாய்ப்புண்டு. தகவலுழவன் (பேச்சு) 07:16, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:d.c.generator&oldid=1830967" இலிருந்து மீள்விக்கப்பட்டது