உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:கா. சேது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்

[தொகு]

வாருங்கள், கா. சேது!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--trengarasu 08:08, 10 ஆகஸ்ட் 2009 (UTC)

---

வாங்க! கா. சேது

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 05:29, 29 மே 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..Reply

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு

[தொகு]

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

மறுவருகை

[தொகு]
  • உங்களது வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உபுண்டுவில் இணைய இணைப்பை ஏற்படுத்துவது பற்றி, Tamilfoss-இல் நீங்கள் எனக்கு அளித்த விளக்கம் இன்றளவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி.
  • மின்கலப்பை உருவாக்கத்தில் நீங்களும் பங்கு கொண்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.இருப்பினும், அதன்தமிழ்99விசைப்பலகையில் சில பயன்பாடுகள் விடுபட்டுள்ளன.1.விசைப்பலகை8-ன்மேலுள்ள, நட்சத்திர குறியீட்டையும், M-இல் இருக்கும் முன்புபக்கச்சாய்வுக்கோட்டையும் எழுத இயலவில்லை. மேலும், பயன்படுத்திப் பார்த்து உங்களுக்கும், முகுந்த்-க்கும் அனுப்புகிறேன். அதனை மின்கலப்பையின் அடுத்த வெளியீட்டில் மேம்படுத்த உதவுமென எண்ணுகிறேன்.
  • eccentric பற்றிய கருத்துக்கள் மேன்மையானது. எனது பார்வையை, அங்கேயேக் கூறியுள்ளேன். [ இதன்படி] தமிழ் இப்பொழுது, 10வது இடத்தில் உள்ளது. மேலும், முன்னேற பலரின் முயற்சிகள் தேவைப்படுகிறது. இது பற்றி பலருக்கும் தெரியப்படுத்த வேண்டிய நிலையுள்ளது. இதுபற்றி மேலும், உங்களின் மின்னஞ்சலில் (skhome@gmail.com) தொடர்பு கொள்கிறேன்.--03:05, 29 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அன்புள்ள தகவல்உழவன்

தங்களது தகவல்களுக்கு நன்றி. எ-கலப்பை-3.0 வெளியீடுகளில் இதுவரை 8-இன் மேலுள்ள நட்சத்திர குறிக்கான விசைமாற்றம் என்னால் தவறவிடப்பட்டுள்ளது. அடுத்து M ல் இருக்க வேண்டிய முன்பக்கசாய்வுகோடு தவறவிட்டமைக்குக் காரணம் தமிழக அரசின் தற்போதைய சீர்தரங்களில் தமிழ் 99 க்கான சீர்தர ஆவணங்களில் விசைமாற்ற பட்டியல்களில் விடுபட்டுள்ளமை ( சென்ற வருடம் தமிழ அரசு வெளியிட்டு தற்போது கருத்து வேண்டல்களுக்கு முன்வைகப்பட்டுள்ள அவர்களது தமிழ்99 மற்றும் தமிழ் தட்டச்சு, மற்றும் எழுத்துருக்கள் ஆகியனவற்றிற்கு சீர்தரங்கள், விசைமாற்றி பட்டியல்கள் போன்றவற்றைக் காண http://tamilvu.org/tkbd/index.htm அணுகலாம்). ஆனால் சீர்தரங்களில் உள்ள தளக்கோல வரைபடத்தில் பழைய விசைமாற்றம் காட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள லினக்சுக்கான விசைப்பலகைகளில் நான் தற்போது (இதை தட்டச்சு இடுகையில்) சோதிக்கும் ஒருங்குறி- தமிழ்99 உம் முன்பக்கசாய்கோடு விடுபட்டுள்ளது. அவர்களது பட்டியலைப் பார்த்தபடியே விசைமாற்ற வரிகளை நான் சென்ற வருடம் ஆக்கியதால் நமது கோப்பிலும் தவறவிடப்பட்டுள்ளது.

அவ்விரண்டு வழுக்களையும் எ-கலப்பை 3.1-dev இல் திருத்தி வெளியீடு 3.0 ன் அடுத்த மேம்பாட்டுக்குள் கொணர நடவடிக்கைகள் எடுப்பேன். மற்றும் தமிழக அரசின் சீர்தரத்தில் பட்டியல்களிலும் வெளியிடப்பட்டுள்ள விசைப்பலகை மென்பொருட்களிலும் உள்ள இரண்டாவது தொடர்பான வழு பற்றி அவர்களது கருத்து வேண்டல் வழியாகவவர்களுக்குத் தெரிவிக்கவுள்ளேன்.

கா. சேது 02:17, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் கா. சேது,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கா._சேது&oldid=1000521" இலிருந்து மீள்விக்கப்பட்டது