உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:eccentric

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by கா. சேது

"கிறுக்கன்" மற்றும் "கிறுக்குத்தனமான" - தவறான பொருள்கள் ==

"eccentric" என உரிச்சொல்லுக்குத் தமிழாக்கமாக்க் காட்டப்படும் "கிறுக்குத்தனமான" சொல்லுடன் இணைக்கபட்டுள்ள தொடுப்பைச் சொடுக்கி வரும் [ http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 ] "கிறுக்கு" சொல்லுக்கான பக்கத்தில் அச்சொல்லின் பொருள்கள் "அறிவு இல்லாதவர்" மற்றும் "புத்தியில்லாதவர்" எனவும் ஆங்கிலத்தில் "Mad" எனப்படுவதும் அதுதான் என காட்டப்படுகின்றன. "கிறுக்கு" சொல்லின் எல்லாப் பொருண்மைகளும் அங்கு உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது இன்னொரு எழுவினா. அதை விடுத்து இங்கு "eccentric" எனப்படுவதை நோக்குங்கால் முற்றிலும் "கிறுக்கு" பொருத்தமற்றது எனக் கருதுகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Eccentricity_%28behavior%29 இல் கூறப்பட்டுள்ளது போல அவ் ஆங்கில சொல்லின் வேர் கிரேக்க "ekkentros" - (நடுவிலிருந்து விலகி இருத்தல்) . அவ் விக்கிப் பக்கத்தில் "Eccentricity is often associated with genius, intellectual giftedness, or creativity. " என தொடங்கும் பத்தியில் eccentric க்கும் கூர்மையான புத்திசாலித்தனத்திற்கும் உள்ள நெருக்கமான தொடர்பு எடுத்துரைக்கப் படுகிறது.

எனவே பயன்படுத்தப்பட்டுள்ள "கிறுக்கன்" மற்றும் "கிறுக்குத்தனமான" ஆகிய இரு சொற்களும் பொருத்தமற்றவை எனக் கருதுகிறேன்.

--கா. சேது 01:20, 29 சூலை 2011 (UTC)Reply

  • ஒரு வாக்கியமாக அமைத்து தவறை உணர்த்துங்கள். பெரும்பான்மையான சொற்களின் பொருட்கள் ஆய்வின் அடிப்படையில் இங்கு பதியப்படுவதில்லை. பயனர்:Sarutv எந்த அடிப்படையில் அங்ஙனம் மொழிபெயர்த்தார் என்று புரியவில்லை. பேச்சுநடையினை ஒட்டிக் கூறியிருக்கலாம். இயல்பு நிலைத் திரிந்த என்றும் பொருள் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன்.--03:12, 29 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:eccentric&oldid=994545" இலிருந்து மீள்விக்கப்பட்டது