பேச்சு:examination

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

What is the equivalent for "examination" in the context of medical examination by a doctor or examination of facts by a judge? பரிசீலனை மற்றும் பரிசோதனை வடமொழி என்றாலும் இவற்றையும் குறிப்பிடலாம். இருப்பினும் இந்த பொருளைத் தரக்கூடிய நல்ல இயற்றமிழ்ச் சொல் கிடைத்தால் நலம். -- Sundar 05:26, 28 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

சுந்தர், விக்கிபீடியாவில் பொதுவாக பிற மொழிச் சொற்களை தவிர்ப்பது போல் அல்லாமல், விக்சனரியில் முதலில் தமிழர்கள் புரிந்து கொள்ளக்கூடிய எந்த வட மொழிச் சொல்லையும் சொற் பொருளாகத் தரலாம் (இயற்றமிழ் சொற்கள் இருக்கும் பட்சத்திலும்). எடுத்துக்காட்டாக, key என்ற சொல்லுக்கு பொருளாக திறவுகோல், சாவி ஆகிய இரண்டையும் தரலாம். சாவி, தமிழ் சொல் அல்ல என்று எங்கோ படித்த ஞாபகம். (பாரசீகமாக இருக்கலாம்) ஆனால், தமிழர்கள் பலரும் அறிந்த தமிழ் சொல் தான். இது போன்ற சொற்களை தவிர்க்காமல், நல்ல தமிழ் சொற்கள் இருக்கும் பட்சத்திலும் அவற்றுடன் சேர்ந்து வழங்க வேண்டும். பிறகு சாவி என்ற பக்கத்தில் மொழி அறிவுடையவர்கள் அச்சொல் மூலத்தை பற்றி ஆராய்ந்து எழுதலாம். இதனால், பிற மொழிச் சொற்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், அது பிற மொழிச் சொல் என்ற விழிப்புணர்வை பரப்ப இயலும். நீங்கள் பரிசோதனை, பரிசீலனை போன்ற சொற்களை முற்றிலும் ஒதுக்க சொல்ல வில்லை என்பதை உணர்கிறேன். எனினும் விக்சனரியின் தொடக்க நிலையில் இது போன்று விரிவாக தெளிவாக கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நடைக்கையேட்டை உருவாக்க உதவும் என நம்புகிறேன்.--ரவி (பேச்சு) 12:06, 30 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:examination&oldid=5200" இலிருந்து மீள்விக்கப்பட்டது