பேச்சு:exploratorium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • exploratorium என்பதற்கான தமிழ்ச்சொல் தேவை. ஆராய்வகம், ஆராய்வுக் காட்சியகம், ஆய்வுக் காட்சியகம்?
  • செய்காட்சியகம் நன்றாக உள்ளது.மெய்த்தேர்வுக் காட்சியகம், செய்தேர்வகம் முதலியன எப்பொருளில் வருகின்றன? மெய்த்தேர்வுக்காட்சியகம் சற்று நீளம் (exploratorium போலவே). நன்றி பழ.கந்தசாமி 19:33, 28 மே 2010 (UTC)
ஒன்று உண்மையானதா அன்றா (ஒன்று இப்படித்தான் ஆகுமா அல்லது அப்படித்தான் ஆகுமா?) என்று மெய்மை தேர்வதால், மெய்த்தேர்வு (test for veracity, truth). தேர்வு என்பதே செல்லுமா செல்லாதா என்று கணிப்பதையும் குறிக்கும் (இருப்பனவற்றில் சிறந்ததை பொறுக்கி எடுத்தலுக்கும் தேர்வு என்னும் சொல் ஆளப்ப்படும்). செய்தேர்வகம் என்பது ஒரு கருத்தின் செல்லுமையை (செல்லும் தன்மையை) நேரடியாக செய்து பார்த்து அறிதல். அப்படி செய்வதற்கான அகம் செய்தேர்வகம். பொது மன்றமாக, காட்சியகமான இடத்தில் இவை செய்யப்படுவதால் காட்சியகம் என்னும் சொல்லைச் சேர்க்க வேண்டியுள்ளது. ஆகவே மெய்த்தேர்வுக் காட்சியகம் என நீண்டுவிடுகின்றது. மெய்மையைத் தேர்வதால் மெய்ப்பகம் எனவும் சுருக்கமாகக் கூறலாம் (proof-testing-place), ஆனால் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. மெய்மனை, மெய்தேர்மனை, செய்தேர்மனை, செய்தேர்காணகம் என்றெல்லாமும் கூறலாம்.--செல்வா 19:44, 28 மே 2010 (UTC)

செய்முறை ஆய்வுக் காட்சியகம்[தொகு]

  • செய்முறை ஆய்வுக் காட்சியகம் என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். Exploratorium இடுகையை ஆங்கில விக்கியில் பார்த்தேன். http://www.exploratorium.edu/ வலைப்பக்கத்தையும் ஆய்ந்தேன். அது ஒரு காட்சியகம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் மாணவரும் ஆசிரியரும் ஆய்வாளரும் நேரடியாகச் சோதனை முறையில் அறிவியல் உண்மைகளை அறிந்திடும் வாய்ப்பும் ஆங்குளது. எனவே ஆய்வு மற்றும் செய்முறை என்னும் சொற்களைச் சேர்க்கலாம். இவ்வாறாக, செய்முறை ஆய்வுக் காட்சியகம் பெறப்படும். மேலே நீங்கள் தரும் சொல்லாக்கமும் நலமே! --George46 20:11, 28 மே 2010 (UTC)
  • விளக்கத்தோடு தரும்போது செய்காட்சியகம் என்ற சொல் சுருக்கமாக இக்கருத்தைச் சொல்கிறது என்று நினைக்கிறேன். பழ.கந்தசாமி 21:26, 28 மே 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:exploratorium&oldid=650817" இருந்து மீள்விக்கப்பட்டது