பேச்சு:lejon

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அமைப்பு[தொகு]

  1. இலத்தீனிய எழுத்துக்களைக் கொண்டுள்ளதால் TOC விக்கி நிரல் இடுவது நலம்.
  2. வழமைப் போல, தமிழாக்கம் செய்யணும்.
  3. விக்கியிடை இணைப்புகள், விக்கியிடைத்தானியங்கியால் வருகிறது.
  4. en:aber போல ஒரே எழுத்தில் பல மொழிகளின் சொற்கள் வருவதால், ஒரு மொழிக்கு == இருசமக்கோடுகள் உள்ள தலைப்பு கட்டாயம் தேவை.

அளவுகள்[தொகு]

  1. 100பைட்டுகள் பகுப்பினால் சேருகிறது.
  2. 113பைட்டுகள் படத்தால் சேருகிறது.
  3. 115பைட்டுகள் படவொலியால் சேருகிறது.(இந்த இணைப்பு, அனைத்துப் பெயர்ச்சொற்களுக்கும் அமைய வாய்ப்பில்லை)
  4. 300பைட்டுகள் விக்கியிடைத் தானியங்கியால் சேருகிறது.(இது மாறுபட்டாலும், குறைந்தது 100பைட்டுகள் சேரும்.

உரையாடல்[தொகு]

த♥உழவன்,

நீங்கள் உருவாக்கிய வார்ப்புரு அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. TOC விக்கி நிரல் என்பது என்ன என்று எனக்கு புரியவில்லை. மேலும், விளக்கத்தில் உள்ள வார்ப்புரு எதற்கு? --நந்தகுமார் 07:27, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றாக உள்ளதா? மகிழ்ச்சி.நான்கிற்க்கும் மேற்பட்ட சமக்குறியீடுகள் கொண்ட, உட்பிரிவு தலைப்பை உருவாக்கும் போது, விக்கிநிரலானது தானாகவே ஒரு அட்டவணையை உருவாக்கும். அதனையே TOC (table of contents). நான் விக்கிநிரல்கள் பற்றி அதிகம் கற்கவில்லை. கற்றுக்கொண்டு இருக்கிறேன். கற்றவரைச்சொல்கிறேன்.உடன் புரிந்துகொள்ள, இப்பக்கத்தினை TOCவரும்படி, மாற்றியுள்ளேன்.

விளக்கம் தலைப்பில் உள்ள வார்ப்புரு, ஆங்கில விக்சனரியில் உள்ளது. இடப்பக்கம் உள்ள English என்பதனைச் சொடுக்கி.. காணவும்.நாம் தட்டச்சு செய்யாமலே, தலைப்புச்சொல்லின் வெவ்வேறு வடிவங்களைக் காட்டும். இங்கு அதற்குரிய நிரல் மாற்றங்களை, அதே போல செய்ய முடியுமா என்று பார்க்கலாம். --00:22, 10 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

விளக்கத்திற்கு நன்றி --நந்தகுமார் 06:26, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]

இறுதி[தொகு]

  • en:aber என்பதனைச் சொடுக்கி, ஆங்கில விக்சனரியில் உள்ளது. அதுபோல (பல மொழிகளும் வரும் சொல்லாக) lejon வடிவத்தில் உருவாக்கி பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.aber. அங்கு ஏற்கனவே இடாய்ச்சு மொழிபெயர்ப்பு உள்ளது.அதன் கீழே, பிறமொழிகளின் தலைப்புகளை உருவாக்கிப்பார்க்கவும்.
  • இணையத்தில் வேறெங்கும் சுவீடியம்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? அல்லது சிறந்த சுவீடியம்-ஆங்கிலம் அகரமுதலி உள்ளதா? அதனை குறிப்பிட்டால், ஆதாரம் என்ற இறுதிப் பகுதியை உருவாக்கி விடலாம். (மற்றவை பிறகு தொடர்வோம்.)
  1. முதலாவது நீங்கள் குறிபிட்டது aber என்னவென்று எனக்கு விளங்கவில்லை. மேலும், மொழியியலில் எனக்கு திறமை போதாது. வேறு பயனர்கள், சுவீடியம்-தமிழ் அறிந்தவர்கள், உதவ வேண்டுகிறேன்.
  2. சுவீடியம்-தமிழ் அகரமுதலி இதுவரை இணையத்தில் நான் பார்க்கவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன் ஈழத்து எழுத்தாளரால் தொகுக்கப்பட்ட சுவீடியம்-தமிழ் அகரமுதலி ஸ்டாக்ஹோம் பன்னாட்டு நூலகத்தில் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அங்கு சென்று அப்புத்தகத்தின் விவரங்களை எழுதுகிறேன்.சுவீடியம்-ஆங்கிலம் அகரமுதலிகள் பல உள்ளன. கீழே உள்ளது ஒரு உதாரணம். நன்றாக உள்ள ஒன்று.--நந்தகுமார் 06:50, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும. நான் தான் சொல்லவந்ததை சொல்லத்தெரியாமல் கொஞ்சம் குழப்பி விட்டேன் போலிருக்கிறது.அதனால் மறுமுறை சொல்கிறேன்.

    • சோதனை:aber சொல்லில் சில மாற்றங்களை, ஆங்கில விக்சனரியைப் பார்த்து செய்திருக்கிறேன். காணவும்.முடிந்தால் அதனை lejon வடிவம் போல விரிவு படுத்தவும்.ஒரு அனுபவத்திற்காகக் கூறினேன். மற்றவரின் பார்வையில் அதன் வளர்ச்சி எவ்விதம் இருக்கும் என தெரிந்து கொள்ளவே உங்களிடம் கேட்டேன். முன்பு ஒரு முறை படிவத்தில் மூன்று புள்ளிகளை வைத்து வடிவமைத்தோம். ஆனால், அதனை நீக்காமலே வரும் பயனர் எழுதினர். பழ.கந்தசாமி மூலம் அது தேவையில்லை என்பதனை உணர்ந்தேன். எனவே, aber என்பதனைச் சொடுக்கி, அதில் lejon வடிவம்போல , பொருளைச் சேரக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு இடப்பக்கம் உள்ள english என்பதனை சொடுக்கினால், ஆங்கில விக்சனரி பக்கம் வரும். அதன் ஆங்கிலப்பொருளைஇங்கு தமிழில் எழுதவும்.ஏதேனும் இடர் வந்தால் உங்களுக்கு பிறகு வருவோருக்கும் அது வராவண்ணம் இப்பொழுதே பக்கத்தை வடிவமைக்கலாம்.
    • ஆதாரம்:ஒரு சொல்லுக்கு பொருளைத்தரும் போது, அதுதானா உண்மையான பொருள் என்று வாசிப்பவருக்குத் தோன்றலாம். அப்படி ஐயம் தோன்றும் போது, அந்த சொல்லிலே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரம் பகுதியைச் சொடுக்கி தெளிவைப் பெறும் வசதியை நாம் தருவதற்காகவேக் கேட்டேன். எடுத்துக்காட்டாக, சிங்கம் என்பதற்கு கொடுக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு சரிதானா என்பதனை அறிய, அப்பக்கத்தின் கீழுள்ள சென்னைஅகரமுதலியைச் சொடுக்கினால், அதன் மொழிபெயர்ப்பான lion என்பதனைக் காணமுடியும்.

அதுபோல நீங்கள் உருவாக்கும் சுவீடியம் சொல்லுக்கு, ஆதாரம் தர சுவீடியம்-ஆங்கிலம் அகரமுதலியைக் கேட்டேன். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பைத் தந்தாலும், தமிழில் நீங்கள் உருவாக்குவதே முதல் வரலாற்றுப் பதிவாக இருக்கும்.அதாவது, சுவீடியம்-தமிழ் அகரமுதலியை முதன்முதலில் படவிளக்கத்துடன் உருவாக்கியது நீங்கள் என வரலாற்றில் பதிவாகும். அதனால் விக்சனரிக்கும் பெருமை தானே. நான் உங்களுக்கு அதற்குரிய எழுத்துப்பணிகளை செய்யும் எழுத்தன் அவ்வளவே. நான் ஒன்றும் மொழியியில் துறையில் சிறப்பான தகுதி படைத்தவன் அல்ல. தமிழுக்காக நீங்கள தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன். முதன்முதலில் நாம் தொடங்குவதால் கொஞ்சம் நேரம் செலவாகிறது. சுவீடியம்-தமிழ் பதிவேற்றத்தை ஒரு நிமிடத்துக்கு 15 என்ற வேகத்தில் பதிவேற்ற முடியும். எதிர்நோக்கும்.--14:12, 10 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

கண்டிப்பாக என் பங்களிப்பினைச்செய்வேன். என்ன எனக்கு நீங்கள் கூறுபவை சட்டென புரியமாட்டேன் என்கிறது, பழக்கம் இல்லை என்பதனால். இடையில் கால தாமதமானால் பொறுத்துக்கொள்ளுங்கள் --நந்தகுமார் 09:09, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஆதாரங்கள்[தொகு]

lejon என்பதில் ஆதாரங்களுக்குரிய வார்ப்புருவை ஏற்படுத்தியுள்ளேன். அதில் people's dictionary மட்டும் உள்ளது. வேறொரு அகரமுதலியையும் இணைத்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். கொடுங்கள் இணைத்து விடுகிறேன்.

இரண்டாவது அகரமுதலி --நந்தகுமார் 09:00, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]

http://tyda.se - இந்த அகரமுதலியையும், அனைத்துச் சொற்களுக்கு ஏற்ப, அவ்வார்ப்புருவில் இணைத்து விட்டேன். aber-ல் சுவீடியப் பொருளைச் சேர்க்கவும். ஒரு அனுபவத்திற்காகக் கூறுகிறேன். மற்றவை அடுத்து.. வாரம் ஒரு அரைமணியாவது வருவீர்களென்று ஆவலுடன் காத்திருப்பேன்.--13:37, 14 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:lejon&oldid=980274" இலிருந்து மீள்விக்கப்பட்டது