பேச்சு:lorry
தலைப்பைச் சேர்லாரி என்ற சொல் வழக்கில் இருக்கிறது. அதையும் ஒரு பொருளாக சேர்க்கலாமா? --Omanickam 14:26, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
மாணிக்கம், தமிழ் விக்கிபீடியாவில், நீண்ட நாட்கள் பயன்பாட்டில் உள்ள ஆங்கில சொற்களுக்கு கூட நல்ல பொருத்தமான தமிழ் சொற்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, tractors என்பதற்கு உழுவுந்துகள் என்கிறோம். தேவையற்ற ஆங்கிலச் சொற்களை வழக்கொழியச் செய்வது அங்கு நோக்கம். தமிழ் விக்சனரியின் மூலம் கலைச்சொல்லாக்கத்தையும் ஒரு நோக்கமாக கொண்டிருக்கிறோம். lorry என்ற சொல்லுக்கு லாரி என்று தமிழில் பொருள் தந்தால் காலத்துக்கும் நம் மக்கள் லாரி என்று தான் சொல்லிக் கொண்டிருப்பர். மாற்றுத் தமிழ்ச் சொல்லை ஆளும் வாய்ப்பு குறைவு. bus முதலில் பஸ் ஆக இருந்து பின்னர் இப்பொழுது அனைவரும் பயன்படுத்தும் பேருந்து ஆகியிருக்கிறது. எனவே, ஆங்கிலச் சொற்களுக்கு பொருள் தரும் பக்கங்களில் நல்ல தமிழில் விளக்கம் அல்லது சொல் மட்டும் தரலாம் என்பது பரிந்துரை. லாரி, பஸ், போட்டோ என்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஆங்கில சொற்களுக்கும் தனிப் பக்கங்கள் அமைத்து அங்கு இவை ஆங்கில சொற்களின் transliteration என்று குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, lorry என்ற பக்கத்தில் சுமையுந்து என்ற சொல் மட்டும் தருவோம். லாரி என்ற பக்கத்தில் இது சுமையுந்துக்கான ஆங்கிலச் சொல்லான lorryயின் ஒலிபெயர்ப்பு வடிவம் என்பது போல் குறிப்பிடலாம். இதன் மூலம் அனைத்துச் சொற்களுக்கும் நல்ல தமிழில் பொருள் தரும் அகரமுதலி என்ற வகையில் தமிழ் விக்சனரியை வளர்த்து எடுக்கலாம். எனினும், பரவலான பயன்பாட்டில் உள்ள வணிக நோக்கில் உள்ள ஆங்கிலம்-தமிழ் அகரமுதலிகள் இவ்வாறு பொறுப்பு உணர்ந்து செயல்படும் என எதிர்பார்க்க இயலாது.
நேற்று, இங்குள்ள தெலுங்கு நண்பர் ஒருவரிடம் தக்காளிக்கு தெலுங்கில் என்ன சொல் என்று கேட்டேன். இன்னும் யோசித்துக்கொண்டும் ஹைதராபாத்தில் அதை tomato என்று தான் சொல்லுவோம் என இன்னும் சாதித்துக் கொண்டிருக்கிறார் :) நம் ஊரில் lorryக்கு உள்ள நிலைமை தக்காளிக்கும் வந்து விடுமோ என சில சமயங்களில் அஞ்ச வேண்டியிருக்கிறது !--ரவி 21:11, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
ஓங்குக தமிழ் வளம் !
- தங்களின் கருத்துக்களை ஏற்று இப்பகுப்பினை(பகுப்பு:வந்தேறிச் சொற்கள்) ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டும் பக்கமாக அமைத்துள்ளேன். உங்களின் கருத்துக்களை, அப்பகுப்பின் உரையாடல் பக்கத்தில் கூறவும். மீண்டும் சந்திப்போம்.(தகவலுழவன் 08:16, 4 மே 2009 (UTC))