பேச்சு:nano technology
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
பழ.கந்தசாமி, nano technology என்னும் இடுகையில் மேலே nunnunukkath thozhilnutpam என்று தெரிவதை எடுத்துவிட்டு, அதைத் தமிழில் பொருளாகக் கொடுத்தால் சிறப்பாயிருக்கும். நுண்ணுணுக்கத் தொழில்நுட்பம் கேட்க மென்மையாகத்தான் உள்ளது!--பவுல்-Paul 02:48, 11 அக்டோபர் 2010 (UTC)
- பழ.கந்தசாமி, நுண்ணுணுக்கம் (நுண் + நுணுக்கம்) என்பது இரட்டிப்பாக உள்ளது. அதுபோலவே, நுண்ணுட்பத் தொழில்நுட்பம் என்பதில் நுட்பம் இரட்டிக்கிறது. ஆங்கில விக்கியில் Nanotechnology, shortened to "nanotech", is the study of the controlling of matter on an atomic and molecular scale என்றுள்ளது. காண்க: Nanotechnology. அந்த வரையறையில் வருகின்ற atomic, molecular என்னும் சொற்களைப் பார்த்தால் தமிழில் அணு என்பதை இணைக்கலாம் போல் தோன்றுகிறது. எனவே nanotechnology = நுண்ணணுத் தொழில்நுட்பம் என்றால் எப்படி? --பவுல்-Paul 01:49, 12 அக்டோபர் 2010 (UTC)
- பவுல்! நுண்ணணு தொழில்நுட்பம் நன்றாக உள்ளது. nano என்ற சொல்போலவும் உள்ளது. அடையாளம் தெரிவிக்காத பயனர் ஏற்படுத்திய இரட்டிப்பை மாற்றலாம் என்றே தோன்றுகிறது. பழ.கந்தசாமி 02:01, 12 அக்டோபர் 2010 (UTC)