பேச்சு:observation

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

observation ஒரு வினைப்பெயராகும், observe என்ற சொல்லே வினைச்சொல்லாகும். அதனால், வினைச்சொல் என்று உள்ளதை பெயர்ச்சொல் என மாற்றி விடுகிறேன். -- Sundar 11:45, 10 நவம்பர் 2005 (UTC)Reply

சந்தோஷ் கவனக்குறைவாகத்தான் வினைச்சொல் எனக்குறிப்பிட்டிப்பார் என நினைக்கிறேன். மற்றபடி tion பின்னொட்டு வந்தாலே பெயர்ச்சொல் தான் :)--ரவி (பேச்சு) 12:43, 10 நவம்பர் 2005 (UTC)Reply
Thanks Sundar for correct and also to Ravi. I was confused with the Peyarchol, Vinaichol and Urichol. I'm really poor in the grammar :(. - Santhoshguru 13:12, 10 நவம்பர் 2005 (UTC)Reply
This happens to all of us mainly because there's no one-one correspondence between the grammatical structure of English and Tamil and we're taught both in a haphazard manner. :-( -- Sundar 14:06, 10 நவம்பர் 2005 (UTC)Reply

சுந்தர் பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லிவிட முடியாது. எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டையும் நன்றாக கற்பித்த ஆசிரியர்கள் அமைந்தார்கள். என் தமிழார்வத்துக்கு முக்கிய காரணமாக என் தமிழ் அம்மாவும் ஐயாவும் அமைந்திருந்தார்கள். அவர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். ஏனெனில், எல்லா மாணவர்களும் அறிவியல் பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் போது நான் ஒருவன் மட்டுமே மொழிப்பாடங்களுக்கும் மெனக்கெட்டேன் :). சரி,பேச்சுப் பக்கத்திற்கு தொடர்பில்லா ஒரு பதிவுக்கு பொறுக்கவும் :)--ரவி (பேச்சு) 18:12, 10 நவம்பர் 2005 (UTC)Reply

ஆம். கண்டிப்பாக அப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது தான். என் தமிழம்மாவும் மிகவும் அருமையாக சொல்லித் தந்தார்கள். அவர்கள் அலகு பிரித்தலைப் பற்றி விளித்துக் கூறுயதன் பின்னாளைய விளைவே இது. என் ஆங்கில ஆசிரியையும் என்னால் குறை கூற முடியாது - ஏனென்றால் அதன் பின் என்னால் வீட்டில் தலைகாட்ட முடியாது (என் அம்மாதான் :)
ஆனால், பழந்தமிழ் இலக்கணங்களை தற்காலத்தில் தகுதரமாக விளங்கும் இந்தோ-ஐரோப்பிய இலக்கண முறைக்குள் கொண்டுவரும் முயற்சியால் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் வேறு வழியில்லை அவர்கள் மொழியில் தானே அவர்களுக்கு உணர்த்த வேண்டும். -- Sundar 05:56, 11 நவம்பர் 2005 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:observation&oldid=5549" இலிருந்து மீள்விக்கப்பட்டது