பேச்சு:pelf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பேச்சு வழக்கில் முறைப்படி ஈட்டாத பணத்தைக் கிம்பளம் என்று கூறுவர். இனமான கருத்துகளை ஓர் அடைவாகச் சொல்ல அடி கிடி (அடியும் அடி போன்றவையும்), காது கீது (காது அது போன்றவையும்), சத்தம் கித்தம் போட்டியோ (சத்தம், அது போன்று ஏதேனும் செய்தால்/போட்டால்) என்பது போல சம்பளம் கிம்பளம் என்பார்கள். இவ்வகையான இன அடைவு சுட்டும் சொற்களை ஆங்கிலத்தில் echo words என்பர். இது இந்திய துணைக்கண்டத்தின் தனிதன்மைகளில் ஒன்று என மொழியியலாளர் கருதுகின்றனர் (யூதர் மொழியிலும், ஆங்கில மொழியுலும் கூட இது போல சிறிதளவு உண்டு - எனினும் இது இந்தியத் துணைக்கண்ட மொழியில்புகளில் ஒன்று என சிறப்பித்துக் கூறுவர்). தமிழில் பெயர்ச்சொல் மட்டுமல்லாமல் பல்வேறு இலக்கணவகையான சொற்களையும் இப்படிச் சொல்லலாம். தங்கச்சியை அடிச்சியோ கிடிச்சியோ தொலைச்சுடிவேன் பார்த்துக்கோ என்று வினைச்சொல் வடிவங்களையும், உயரம் கியரம் எல்லாம் கிடையாது என்று உரிச்சொல் வடிவங்களையும், ஏறத்தாழ எல்லா இலக்கண வடிவங்களையும் இவ்வகையான இனச்சொல் அடைவாகக் கூற முடியும். இதில் கிம்பளம் என்பது பொதுவாக தனித்து பொருள் தருவதாகக் கொள்வது ஒரு புதுப் பொருள் வளர்ச்சி என்றே கருதிகின்றேன். ஆகவே கிம்பளம் என்பது பொருள் கொண்ட ஒரு சொல்லாக பதிவு செய்ய முடியாது (தமிழ் வழக்கப்படி, ஆனால் தற்கால மொழியியல்படி பொருளுடைய சொல்லாக ஏற்கப்படலாம்)--செல்வா 13:08, 18 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pelf&oldid=633223" இலிருந்து மீள்விக்கப்பட்டது