பேச்சு:pharmacist

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மருந்தாளுநர் நல்ல சொல். மருந்தியல் என்பது pharmacology எனலாம். மருந்தியலர், மருந்தர் என்றும் கூறலாம். ஆனால் மருந்தர் என்பதை மருத்துவர் என்றும் கொள்ள இடம் உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இப்படித்தான் காட்டுகின்றது. எனவே மருந்தாளுனர், மருந்தியலர் (மருந்தியலாளர்) என்பன pharmacist என்பதற்கு வழங்குவது குழப்பம் தராமல் இருப்பது. ஆசிரியர் என்பது ஆசு (குற்றம்) இரியர் ( இரிதல் = நீக்குதல், எனவே களைபவர்) என்று கூறுவார்கள். அது போல மருத்துவர் ஒரு பிணியிரியர் அல்லது பிணிநீக்கியர். நோய் நாடி, நோய்முதல் நாடி என்னும் குறளில் வருவது போல

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
திருக்குறள்

அவ்வகையான செயல்களைச் செய்வதால் நோய் களைவாரை நோய்நீக்கியர், நோயிரியர் எனலாம். தமிழில் பண்டிதன் என்றாலும் மருத்துவப் பண்டிதனைக் குறிக்கும் வழக்கு உண்டு. சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதே நோக்கம். --செல்வா 20:33, 4 ஜூன் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pharmacist&oldid=658738" இலிருந்து மீள்விக்கப்பட்டது