பேச்சு:sclerosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

sclerosis என்பதற்கு விழிவெண்படலம் என்னும் சொல் நடைமுறையில் இல்லாததால் நீக்கப்பட்டு அதன் சரியான தமிழ் அர்த்தம் எழுதப்பட்டுள்ளது.--சி. செந்தி 16:58, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

பிழையை நீக்கியமைக்கு மிக்க நன்றி செந்தி!! தமிழில் கூறப்படும் காய்த்தல் (பல முறை உறுப்பு தேய்மானத்துக்கு உட்பட்டால் (கை, முட்டி, உள்ளங்கையில் விரலுக்குக் கீழே உள்ள பகுதிகள்), தேய்பாடு படும் பகுதி, தடிப்படைந்து இருப்பதைக் காச்சு (< காய்ச்சு) போச்சு என்பர். இச்சொல் sclerosis என்னும் சொற்பொருளுக்கும் நெருக்கமாக இருப்பதுபோல் தெரிகின்றது. பொருந்துமா?--செல்வா 20:15, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

Sclerosis எனப்படும் சொல் மருத்துவத்தில் நோய்களுடன் சம்பந்தப்பட்டே வருகிறது. தோலில் ஏற்படும் கடினத்தன்மை scleroderma (systemic sclerosis) என்னும் நோயில் வருகிறது (முதற் பக்கத்தில் நல்லதொரு படம் தகவலுழவன் இணைத்துள்ளார்), காய்ச்சுப் போதல் ஒரு உடல் செயலியல் விளைவு என்பதால் அதனை அவ்வாறு அழைப்பது சரியா என்பது சந்தேகத்துக்குரியது. முதுகு நாணில் (மைய நரம்புத் தொகுதியில்) இது ஏற்படும் போது multiple sclerosis என்கிறோம், தமனியில் (நாடியில்) ஏற்படும் போது Atherosclerosis, இப்படியே எல்லாவகையிலும் நோயையே இந்தச் சொல் சுட்டுகிறது. நீங்கள் கூறிய செயற்பாட்டிற்கு callus என்னும் பதம் இருக்கிறதே. --சி. செந்தி 21:58, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sclerosis&oldid=915608" இருந்து மீள்விக்கப்பட்டது