பேச்சு:starfish

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

starfish என்றால் நட்சத்திரம் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது, நட்சத்திரமீன் என்று சொல்லலாம், எனினும் நட்சத்திரத்திற்கு விண்மீன் என்று பயன்படுத்தினால் நட்சத்திரமீனை எவ்வாறு அழைப்பது??--சி. செந்தி 17:10, 10 டிசம்பர் 2010 (UTC)

  • சுந்தர் தானியங்கி தவறாக பதிவேற்றவில்லை. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மொழிபெயர்ப்பே தவறாக இருக்கிறது. பிழையை நீக்கி, படமொன்றையும் இணைத்து விட்டேன்.--த*உழவன் 17:33, 10 டிசம்பர் 2010 (UTC)

செந்தி விண்மீன்மீன் என்று சொல்லலாம் தவறில்லை. ஐங்கால்மீன் அல்லது ஐங்கிளை மீன் என்றும் சொல்லலாம். மேலும் இது மீனும் அல்ல ஒரு கடல்வாழ் உயிரி. ஆங்கிலத்திலே இசுட்டார் மீன் என்பதால் நாமும் அப்படித்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. அப்படி சொல்வதானாலும் விண்மீன் மீன் என்று சொல்வதால் தவறில்லை. விண்மீன் நீருயிரி, விண்மீன் கடலுயிரி, விண்மீன் உயிரி என்று பல விதமாகப் பெயர் சூட்டி வழங்கலாம். --செல்வா 18:36, 10 டிசம்பர் 2010 (UTC)

இவ்வுயிரி Echinodermata என்னும் தொகுதியைச் (phylum) சேர்ந்த உயிரினம். மீன் என்பது முற்றிலும் வேறான முதுகுநாணிகள் (chordata) தொகுதியைச் சேர்ந்தது. எனவே ஆங்கிலத்தில் star fish என்றாலும் நாம் ஐங்கை கடலுயிரி அல்லது முள்ளந்தோலிகள் (Echinodermata) தொகுதியில் உள்ள ஐங்கை கடலுயிரி எனலாம். --செல்வா 19:25, 10 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:starfish&oldid=900861" இலிருந்து மீள்விக்கப்பட்டது