உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:toilsome

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கருத்து

[தொகு]

பாடா படுத்தறான் என்னும் பேச்சு வழக்கில் தென்படும் பாடா என்னும் சொல் பாடுமிக்க, பாட்டார்ந்த என்னும் பொருளிலேயே வருகின்றது. படுத்துகிறான் என்னும் சொல்லில் வரும் பொருளும், வருத்துகிறான் என்பது (toilsome என்னும் பொருள் தருவதே). எனவே வருத்தூட்டு, வருத்து என்றும், பாடூட்டு என்றும் சொல்லலாம். (ஆர்ந்த என்றால் நிறைந்த என்று பொருள். கண்ணாரக் கண்டேன், நெஞ்சார வாழ்த்தினேன் என்னும் சொல்லாட்சிகளில் ஆர என்னும் சொல் நிறைய என்னும் பொருள் தருவது. எனவே ஆர்ந்த என்றால் நிறைந்த என்று பொருள்)--செல்வா 21:52, 17 ஏப்ரல் 2010 (UTC)

  • செல்வா, நன்றி, வருத்தம் என்பதும் பொருத்தம். மெய்வருத்தம் தரும் என்றும் இடலாம் பழ.கந்தசாமி 21:56, 17 ஏப்ரல் 2010 (UTC)
ஆமாம் மெய்வருத்தம் தரும் என்று சொல்லலாம். ஆனால் பேச்சு வழக்கில் ஐயோ அது அலுப்புப்பா என்று சொல்லும்பொழுது வரும் அலுப்பு என்பதும் நேரடியாக toilsome தான். எனவே அலுப்பு என்பதனையும் சேர்த்துக்கொள்ளலாம். --செல்வா 22:03, 17 ஏப்ரல் 2010 (UTC) திருநெல்வேலியில் அல்லாடறான் என்பார்கள். அந்த அல்லாடுதல் ஓரளவுக்கு இதே பொருள்தான் ஆனால் toilsome என்று சொல்ல முடியாது. --செல்வா 22:05, 17 ஏப்ரல் 2010 (UTC)
இப்பொழுதுள்ள சொற்கள் போதும் எனினும், இன்னொரு சொல்லையும் நினைத்துப் பார்க்கலாம். உழிதரு என்றால் அலைச்சல் தரும், மன உளைச்சல் தரும், நிலைகொள்ளாமல் இருக்கச்செய்யும், இங்கும் அங்குமாக அலைக்கழிக்கும் என்றெல்லாம் பொருள் தரும் சொல். ஆனால் உழிதரு என்னும் சொல் பாடுதரும், பாடான அல்லூட்டு - tiresome - என்னும் பொருளிலும் வழங்கத்தக்க சொல். அது உழிதரும் வேலைப்பா என்றால், அது பாடான வேலையப்பா என்பது போன்ற பொருளும் தரும். ஒரு பதிவாக இருக்கட்டுமே என்றுதான் இடுகின்றேன். இப்பொருளை சேர்ப்பதற்காக அல்ல. --செல்வா 22:48, 17 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:toilsome&oldid=633215" இலிருந்து மீள்விக்கப்பட்டது