உள்ளடக்கத்துக்குச் செல்

பேய்மிரட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பேய்மிரட்டி:
மூலிகைச்செடி
பேய்மிரட்டி:
மூலிகைச்செடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பேய்மிரட்டி, பெயர்ச்சொல்.
  • (மூ. அ.)
  1. செடி வகை
  2. இரட்டைப் பிரமட்டை
  3. எருமுட்டைப் பீநாறி
  4. வெதுப்படக்கி
  5. கடுப்படக்கி
  6. பேய்மருட்டி
  7. காண்க...கிலுகிலுப்பை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A very soft woolly plant,
  2. see also..கிலுகிலுப்பை..species of rattlewort

விளக்கம்

[தொகு]
  • தலைப்பு மற்றும் பொருளில் முதல் மூன்றும் ஒரேவகையான மூலிகைக்கான குறிப்பு:-
  • இஃதொரு மூலிகைச் செடி..இதை முறையாகப் பயன்படுத்துவதால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம், மாந்தசுரம், வீக்கம், கழிச்சல் ஆகிய பிணிகள் போகும்
  • பேய் பூதகண தோஷங்களுக்கு-(கிரக தோஷங்கள்) - வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப்போல, இந்த மூலிகையின் இலைகளையும் கத்தையாகக் கட்டிக்கொண்டு அடிப்பது காட்டுவாசிகளின் வழக்கம்...ஆகையால் இது பேய்மிரட்டி என்றும் கூறப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேய்மிரட்டி&oldid=1968249" இலிருந்து மீள்விக்கப்பட்டது