பொள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொள்:
துளையிடப் படுகிறது

பொள்(வி) (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(வி)

  1. துளையிடு
  2. (கல் போன்ற கெட்டியான பொருளில் உளி போன்றவற்றால்) சிறு குழி உண்டாக்கு
  3. விரைவுக் குறிப்பு (ஒன்றைச் செய்யும் பொழுது விரைந்து செய்யத் தூண்டக் கூறும் சொல்)
  4. ஊக்கக் குறிப்பு (ஒன்றைச் செய்யும்பொழுது அதற்கு ஊக்கம்தருமாறு கூறும் சொல்)
  5. தகுதியான காலத்தில்.

(பெ)

  1. துளை, ஓட்டை, பொத்தல், (சிறு) குழி, துணியில் கிழிசல், தழும்பு
  2. உட் டொளை (பி.நி.), (தி.நி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. hole
  2. a word implying quickly
விளக்கம்
  1. பொள் என்னும் வினை பொளி என்றும் ஆகும். பொளிதல் என்றாலும் பொள்ளல் அல்லது பொள்ளுதல்.
  2. பொள்ளாமணி என்றால் துளைக்கப்படாத மணி. துளையாமணி. (பொள்ளல் = துளைத்தல்)
பயன்பாடு
  • உரலுக்கு பொள்ளு போட, ஆளைக்கூட்டி வா!

(இலக்கியப் பயன்பாடு)

  • தன் னகல மெல்லாம் பொள்ளென வியர்த்து (சீவக சிந்தாமணி. 256)
  • பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.    (திருக்குறள்) - காலம் அறிதல். 487
  • இங்கேயும் பொள்ளென ஆங்கே புறம் வேரார் என்பது சட்டென (பொள்ளென) வெளியே வேரார் (அதாவது சினத்தால் புழுங்கார்) என்று ஆளப்பட்டிருப்பதையும் காணலாம். [வேர்தல் = (சினத்தால்) புழுங்கல்]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை-1, பதிப்பு 1974

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொள்&oldid=1187853" இலிருந்து மீள்விக்கப்பட்டது