போண்டி
Appearance
பொருள்
போண்டி(உ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- at a loss
- pauper
விளக்கம்
சென்னை வட்டார வழக்கு. செல்வம் உடையவராக ஆரம்பத்தில் இருந்தாலும், நாளடைவில் தவறான முதலீடுகள் செய்தும், கண்டபடி கேட்போருக்கெல்லாம் கொடுத்தும், போதாகுறைக்கு தாராளமாக கடன் வாங்கி அசலையும், வட்டியையும் கட்டமுடியாமல் நட்டமடைந்து சொத்தெல்லாம் இழந்து பணம் காசு இல்லாமல் பரம ஏழையாக போவதை போண்டி ஆவது என சொல்வதுண்டு.
பயன்பாடு
அந்த ராமராசுவை பார்த்தாயா? எப்படியெல்லாம் இருந்தார்! இருந்த ஆஸ்தியை, பணத்தை சரியாக பராமரித்து காத்து மேலும் விருத்தி செய்யாமல் கண்டபடி செலவு செய்து போண்டி ஆகிவிட்டர்.