மங்களம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மங்களம்(பெ)
- நிறைவு/முடிவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - auspiciousness
- மலையாளம் - മംഗളം(maṅgaḷaṁ)
பயன்பாடு
இது மங்களகரமான நேரம்! (This is an auspicious occasion)
விளக்கம்
சிலர் இதை வட மொழியிலிருந்து வந்ததென கூறுவர், சொல் ஆய்வு அறிஞர் மா.சோ.விக்டர் உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் எனும் தன் சொல்லாய்வு நூலில் இந்த சொல்லின் மூலம் தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறார். தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம் மங்கலம் , பின்பு மங்களம் என்று ஆனதென கூறுகிறார்.