உள்ளடக்கத்துக்குச் செல்

மடங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மடங்குதல், பெயர்ச்சொல்.
  1. வளைதல் (பிங். ) படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9)
  2. முடங்குதல் (திவா.)
  3. கோணுதல் (W.)
  4. வளைந்து செல்லுதல் (W.)
  5. மீளுதல் (பிங். )
  6. சொல் முதலியன திரும்ப வருதல். என்று மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255, உரை)
  7. திருகுறுதல் (W.)
  8. குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23, 119)
  9. சுருங்குதல். மூப்புக்காலத்து உடலின் தோல் மடங்கும்
  10. ஓடுங்குதல்.(திருக்கோ. 75, உரை.)
  11. நெளிதல் (W.)
  12. கீழ்ப்படுதல். காரோலிமடங்க . . . களத்தினார்த்த பேரொலி (கம்பரா. நாகபாச. 291)
  13. தாழ்தல். இகழ்பாடுவோ ரெருத்த மடங்க (புறநா. 40, பாடபேதம்)
  14. செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் (குறள். 1036)
  15. உக்கிரமடங்குதல் (W.)
  16. நிறுத்தப்பெறுதல். மண்டமரின்றொடு மடங்கும் (கம்பரா. கும்ப. 267)
  17. தடுக்கப்படுதல் (W.)
  18. வாயடங்குதல் (W.)
  19. சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To become bent, as the arm or leg
  2. To be shut, closed, folded, as a knife or table
  3. To be inflected, deflected, refracted, bent out of place
  4. To bend, turn, as a road, or river
  5. To turn about
  6. To be repeated
  7. To be twisted, distorted, as a limb
  8. To be diminished
  9. To shrink
  10. To be absorbed
  11. To be battered
  12. To submit, yield, surrender
  13. To be humbled, tamed, reduced, as pride; to be broken down, as the constitution
  14. To be indolent, inactive
  15. To be decreased in force, as the wind or heat; to yield, as a disease or poison to medicines or mantras
  16. To be stopped, hindered; to be quashed, as proceedings
  17. To be turned off, diverted, thrown back, as weapons
  18. To be silenced by argument, by sophistry, by authority; to be checked, confuted, refuted
  19. To be lodged with one, as property on the death of the owner



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடங்குதல்&oldid=1260492" இலிருந்து மீள்விக்கப்பட்டது