மணத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மணத்தல், பெயர்ச்சொல்.
 1. கலத்தல்
  (எ. கா.) அறையும் பொறையு மணந்த தலைய (புறநா. 118)
 2. வந்து கூடுதல். நிரை மணத காலையே (சீவக. 418)
 3. நேர்தல். மருவுற மணந்த நட்பு (கலித். 46)
 4. பொருந்துதல். மத்தகத் தருவியின் மணந்த வோடைய (சீவக. 2211)
 5. கமழ்தல். மணந்த சோலையும் (அரிச். பு. விவாக. 98)
 6. விளங்குதல். தேவர் மகுட மணக்குங் கழல் வீரா (திருப்பு. 527)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
 7. மணம் புரிதல். மணந்தார் பிரிவுள்ளி (நாலடி. 397)
 8. புணர்தல் (பிங்.) மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் (கலித். 24)
 9. கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகையவாய் (கலித். 25)
 10. அணைத்தல். திருந்திழை மென்றோன் மணந்தவன் (கலித். 131)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To be united, mingled
 2. To come together
 3. To happen
 4. To be fixed, attached
 5. To eimt fragrance
 6. To shine
 7. To wed
 8. To copulate with
 9. To live in company with
 10. To embrace( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணத்தல்&oldid=1260794" இருந்து மீள்விக்கப்பட்டது