மன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மன்று, பெயர்ச்சொல்.
 1. சபை
 2. சிதம்பரத்துள்ள கனகசபை
  (எ. கா.) தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4, 92)
 3. நியாயசபை
  (எ. கா.) நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145)
 4. பசுத்தொழு
  (எ. கா.) ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர (குறிஞ்சிப். 218)
 5. பசு மந்தை
  (எ. கா.) மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5, கீழ்க்குறிப்பு)
 6. மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
  (எ. கா.) மன்றும் பொதியினும் (தஞ்சைவா. 34)
 7. தோட்டத்தின் நடு
  (எ. கா.) மன்றிற்பையு டீரும் (ஐங்குறு. 246)
 8. நாற்சந்தி
  (எ. கா.) மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு., 3, 6, 3)
 9. வாசனை
  (எ. கா.) மன்றலர் செழுந்துளவு (கம்பரா. திருவவ. 24)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Hall of assembly
 2. Golden hall of Chidambaram
 3. Court of justice; arbitration court
 4. Cow-stall
 5. Herd of cows
 6. Raised platform under a tree for village meetings
 7. Centre of garden
 8. Junction of four roads or streets
 9. 9(ஒப்பிடுக)→ மன்றல். Fragrance


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்று&oldid=1346959" இருந்து மீள்விக்கப்பட்டது