மலர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Full bloom of Flower - பூத்தொகுதி
மலர்:
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: flower
  • பிரான்சியம்: fleur

இலக்கியச் சான்றுகள்[தொகு]

  1. சுனையில் தழைத்த நீலத்தினது வண்டு மொய்க்கும் புதிய மலரின்கண், குளிர்ந்த துளி கலக்கப் பறம்பு மலையில் மழைபெய்யினும் பெய்யாதொழியினும், மலைச்சிமையந்தோறும் அருவி நீர் ஓடிவரும் (புற.105:3).
  2. பறம்பு மலை, வேலால் வெல்லுகின்ற வேந்தர்க்கு அரிது ஆகும். நீலத்தினது இணைந்த மலரை ஒக்கும் மையுண்ட கண்ணையுடைய கிணையுடைய விறலிக்குப், பாடினளாய் வரின், எளிதாகும் என்று, கபிலர் பாரியின் மறமும் கொடையும் கூறியுள்ளார் (புற.111:3).
  3. மழையால் முகந்து சொரியப்பட்டநீர், கடைக்கண் காயினும் தாளையுடைய வேங்கை மலரின் பொன் போலும் பூவை நாடோறும் சுமந்து, நீரானது கடற்கண் செல்லும், செவ்விய மலைப்பக்கத்தையுடைய நாஞ்சில் மலைக்குப் பொருநன், நாஞ்சில் வள்ளுவன் (புற.1378,9).
  4. ஆவியருடைய வேந்தே! யாம் செவ்வழிப்பண்ணை, வாசித்து வந்ததைத் தமியளாய்க் கேட்டுப், புலம்பு கொண்டு உறைகின்ற அரிவையது, மையிருங் கூந்தலை மாசறக் கழுவிச் செவ்விய மலர் மகிழும் வண்ணம் இன்றே நீ எழுந்தாயானால், அதுவே, எம்முடைய பரிசிலாகும் என்று, கண்ணகியின் காரணமாகப் பேகனைப், பெருங்குன்றுார் கிழார் வேண்டியுள்ளார் (புற. 1478).
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலர்&oldid=1934874" இருந்து மீள்விக்கப்பட்டது