மழுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மழுங்குதல், பெயர்ச்சொல்.
 1. கூர்நீங்குதல்
  (எ. கா.) நுதிமழுங்கிய (புறநா. 4)
 2. பொலிவழிதல் (திவா.)
 3. கெடுதல்
  (எ. கா.) உரவுத்தகை மழுங்கி (கலித். 120)
 4. அறிவு கூர்மைகுறைதல்
  (எ. கா.) உதிக்கின்ற புத்தியு மழுங்கிடும் (திருவேங். சத. 15)
 5. ஒளிகுறைதல்
  (எ. கா.) கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146)
 6. கவனிப்பின்றிப் மறைந்துபோதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To be blunt or dull, as an edge or point
 2. To be obscured, deprived of lustre, of glory; to fade, as a color, as the lustre of a jewel or the glory of a state
 3. To disappear; to be lost
 4. To become dull in feeling, to lose keenness of intellect
 5. To be dim, obscure, as the sun or moon in an eclipse or behind a cloud
 6. To pass by without strict examination, inquiry or notice


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழுங்குதல்&oldid=1340510" இருந்து மீள்விக்கப்பட்டது