முடிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முடிதல், பெயர்ச்சொல்.
 1. முற்றுப்பெறுதல்
  (எ. கா.) சொன்முறை முடியாது (தொல். சொல். 233) இந்நூன் முடிந்தது முற்றும்
 2. நிறைவேறுதல்
  (எ. கா.) முட்டின்றி மூன்று முடியுமேல் (நாலடி. 250)
 3. அழிதல்
 4. சாதல் கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு)
 5. தோன்றுதல்
  (எ. கா.) முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவை மூன்றும் (பரிபா. 13, 46)
 6. இயலுதல்
  (எ. கா.) என்னால் அதனைச்செய்ய முடியவில்லை
 7. சண்டை முட்டுதல்
  (எ. கா.) அவனுக்கும் இவனுக்கும் முடிந்து விட்டான்
 8. சம்பந்தப்படுத்துதல்
  (எ. கா.) அவளுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டார்கள். -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
 9. சூடுதல்
  (எ. கா.) அவள் தலையிற் பூவை முடிந்தாள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To end, terminate; to be complete, as in sense To be effected or accomplished To be destroyed; to perish To die To appear To be possible, capable To incite persons to a quarrel To make a marriage alliance To tie, fasten; to make into a knot முடிச்சிடுதல்
  (எ. கா.) தலையை முடிந்தான்; ரூபாயை முடிந்தான் 2. To put on, adorn( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிதல்&oldid=1269002" இருந்து மீள்விக்கப்பட்டது