முட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முட்டுதல், பெயர்ச்சொல்.
 1. மோதுதல்
  (எ. கா.) துள்ளித்தூண் முட்டுமாங்கீழ் (நாலடி. 64)
 2. தடுத்தல்
 3. எதிர்த்தல்
 4. எதிர்ப்படுத்தல்
  (எ. கா.) வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். பொ. 112) (சூடாமணி நிகண்டு)
 5. பிடித்தல்
  (எ. கா.) குழலாள் . . . கையினைக் கையாலவன் முட்டிடலும் (உத்தாரா. திக்குவி. 16)
 6. தேடுதல்
  (எ. கா.) கொணருது நளினத்தாளை . . . உலகினை முற்று முட்டி (கம்பரா. சம்பாதி. 7) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
 7. குன்றுதல்
  (எ. கா.) முட்டா விண்பத்து முடிவுல கெய்தினர் (சிலப். 15, 197)
 8. நிறைதல்
  (எ. கா.) தோயமுட்டிய தோடவிழ் மலர்த்தடம் (காஞ்சிப்பு. கழுவாய். 79)
 9. முடிதல்
  (எ. கா.) முட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும் (தொல். பொ. 435)
 10. தடைப்படுதல்
  (எ. கா.) வெண்ணெல் லினரிசி முட்டாது . . . பெறுகுவீர் (மலைபடு. 564) இத்தன்மமுட்டில் ((S. I. I.) iii, 95)
 11. பொருதல்
  (எ. கா.) குலப்பகைஞன் முட்டினான் (கம்பரா. நட்புக். 50)
 12. வழுவுதல்
  (எ. கா.) புண்ணிய முட்டாள் (மணி. 16, 49)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To dash against, butt; to hit against To oppose, hinder To assault, attack To meet To grip, grasp To seek To be deficient
 2. To be full To end To be hindered, prevented To fight, attack To fail, stray away( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டுதல்&oldid=1268538" இருந்து மீள்விக்கப்பட்டது