முற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முற்றுதல், பெயர்ச்சொல்.
 1. முதிர்தல்
  (எ. கா.) முற்றி யிருந்த கனியொழிய (நாலடி. 19)
 2. முழுவளர்ச்சி பெறுதல்
  (எ. கா.) ஓர் முற்றாவுருவாகி (திவ். திருவாய். 8, 3, 4 )
 3. முதுமையாதல் (பிங். )
 4. பெருகுதல்
  (எ. கா.) முற்றெரிபோற் பொங்கி (பு. வெ. 8, 16)
 5. வைரங்கொள்ளுதல் (சூடாமணி நிகண்டு)
 6. தங்குதல்
  (எ. கா.) குடகடன் முற்றி (மதுரைக்.238)
 7. நிறைவேறுதல்
  (எ. கா.) இமையோர்க்குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11)
 8. முடிதல்
  (எ. கா.) தங்கரும முற்றுந் துணை (நாலடி. 231)
 9. இறத்தல்
  (எ. கா.) மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2, 10, 1)
 10. போலுதல்
  (எ. கா.) எழுமுற்றுந் தோளார் (சீவக. 1870)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
 11. செய்துமுடித்தல்
  (எ. கா.) வேள்வி முற்றி (புறநா.15)
 12. அழித்தல்
  (எ. கா.) முற்றினன் முற்றின னென்று முன்புவந்து (கம்பரா. கும்பகர். 311)
 13. சூழ்தல்
  (எ. கா.) பாண்முற்றுக நின்னாண்மகி ழிருக்கை (புறநா. 29)
 14. வளைத்தல்
  (எ. கா.) முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68)
 15. அடைதல்
  (எ. கா.) அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி (இலக். வி. 754, உரை)
 16. மேற்கொள்ளுதல்
  (எ. கா.) சுளிமுகத் துவாவின் முற்றி (ஞானா. 26)
 17. தேர்தல்
  (எ. கா.) புரவிப்போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To become mature; to ripen To be fully grown To be advanced in age To abound, increase To become hardened, as the core of a tree To abide, dwell To be fulfilled, as one's desire To come to an end; to be finished To die To be similar To complete, finish To destroy, kill [T
  (எ. கா.) muttu.] To surround [K.muttu.] To besiege, blockade To approcah, reach To get upon To become expert in( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்றுதல்&oldid=1270216" இலிருந்து மீள்விக்கப்பட்டது