உள்ளடக்கத்துக்குச் செல்

மெலிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மெலிதல், பெயர்ச்சொல்.
  1. வலிகுறைதல்
  2. உடல் இளைத்தல்
    (எ. கா.) ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6, 10) (சூடாமணி நிகண்டு)
  3. வருந்துதல்
    (எ. கா.) அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8)
  4. அழிதல்
    (எ. கா.) மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318, 10)
  5. எளியராதல் (W.)
  6. இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல்
    (எ. கா.) குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறநா. 21, உரை)
  7. சுரத்திற் றாழ்தல்
    (எ. கா.) யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய (சிலப். 3, 92)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be weak To become lean, thin To suffer; to languish To perish To become poor; to be reduced in circumstances (இலக்கணம்) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant ( Mus. ) To be lowered in pitch



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெலிதல்&oldid=1273077" இலிருந்து மீள்விக்கப்பட்டது