உள்ளடக்கத்துக்குச் செல்

ருஷிமூலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ருஷிமூலம்:
என்னும் வசம்பு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- ऋषि + मूल -- (வ்)ருஷி + மூல = மூலச்சொல்
  • ருஷி+ மூலம்= கூட்டுச்சொல்
  • Acorus Calamus (தாவரவியல் பெயர்)

பொருள்

[தொகு]
  • ருஷிமூலம், பெயர்ச்சொல்.
  1. காண்க... ரிஷிமூலம் 1
  2. முனிவரின் பிறப்பு
  3. வசம்பு (மூ. அ.)என்னும் மூலிகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See...ரிஷிமூலம் 1
  2. The ancestry or parentage of sages
  3. sweet flag

விளக்கம்

[தொகு]
  • முனிவரின் பிறப்பு என்பது ஒரு பொருள்...மற்றும் இச்சொல் வசம்பு எனப்படும் ஓர் அற்புதமான மூலிகையையும் குறிக்கும்..
  • வசம்பை முறைப்படி உபயோகித்தால் பாம்பு, பூச்சிகள்,மற்றும் சிலவகைத் தாவரங்கள் ஆகியவற்றின் விஷம், உட்கொண்ட நஞ்சு, அற்புத இரணம், ஐவகை வலி, விஷபாகரோகம், குன்மம், இரத்தப் பித்தம், வாய் நாற்றம், சூலை, சந்நிபாதம், பைசாசம், பிலீகநோய், பாதவன்மிகம், காசம், நாக்குப் பூச்சி (கயிறுபோல நீண்ட மலக்கிருமி) ஆகிய பிணித்தொல்லைகள் போகும்...குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களை மிகச்சிறப்பாகப் போக்கும் வசம்பு வேரை குழந்தைகளுக்கான சஞ்சீவியென்றேப் போற்றுவர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ருஷிமூலம்&oldid=1921192" இலிருந்து மீள்விக்கப்பட்டது