வந்தே மாதரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வந்தே மாதரம்:
பாரத மாதா--இந்தியத் தாயின் சிலை.
வந்தே மாதரம்:
பாடலை இயற்றிய பங்கிம் சந்த்ர சட்டர்ஜி.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்/வங்காளி--वन्दे मातरम्--வந்தே3 மாத1ரம்--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • வந்தே மாதரம், பெயர்ச்சொல்.
  1. தாயே, வணக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. oh mother, salutations to you.

(This is the national song of the republic of india)

விளக்கம்
  • ..இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது காசுமீர் முதல் குமரி வரை எல்லா இந்திய மக்களையும் நாட்டின் சுதந்திரத்திற்குப் போராட உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிணைத்த முழக்கம் வந்தே3 மாத1ரம் என்பதாகும்...இது வங்காளக் கவிஞர்/புதின ஆசிரியர் பங்கிம் சந்த்ர சட்டர்ஜி (சட்டோபாத்யாய்),என்பவரால் இயற்றப்பட்ட 1882-ம் வருடத்திய ஆனந்தமடம் என்னும் புதினத்தில் காணப்படும் பாடல் வரிகளாகும்...ஜாது பட்டா என்றழைக்கப்பட்ட ஜாதுநாத் பட்டாசார்யா என்பவர் முதன்முதலாக இப்பாடலுக்கு இசை அமைத்தார்... சமசுகிருதம் மற்றும் வங்கமொழிகளுக்குப் பொதுவான இந்தச்சொற்கள் இந்தியா முழுவதும் புரிந்துக்கொள்ளப்பட்டன...நாட்டின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் இயக்கம் இந்த முழக்கத்தை மக்களுக்கு தேசபக்தியூட்டி வீறுகொண்டு எழுச்சிக்கொள்ளவைக்க வெகு நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது......இந்தப்பாடலின் முதல் இரு பத்திகள் இந்தியாவின் தேசீயப் பாடலாக 24 சனவரி 1950 அன்று அங்கீகரிக்கப்பட்டது...இந்தியாவை ஒரு தாயாக உருவகப்படுத்தி, அவளுக்கு பக்தி,பணிவு, மரியாதையுடன் கூடிய வந்தனத்தை/வணக்கத்தை தெரிவிக்கும் விதமாக 'வந்தே மாதரம்' அதாவது 'தாயே உனக்கு எங்கள் வணக்கம்' என்று முழக்கம் எழுப்புவது இன்றளவும் வழக்கத்திலிருந்து வருகிறது...

"https://ta.wiktionary.org/w/index.php?title=வந்தே_மாதரம்&oldid=1394554" இருந்து மீள்விக்கப்பட்டது