உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சான்றுகோள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • உசாத்துணை, சான்றுகோள், எடுகோள் என்பன சிறந்த சொற்கள் என்பதனை உணருகிறேன். குறிப்பாக உசா என்ற சொல்லினை, தொல்காப்பியத்தில் கண்டு மகிழ்ந்தேன். அகரமுதலி அடிப்படை நூல் என்பதால், கற்க முனைவோருக்கும் புரியக்கூடிய, சொல்வளமுடைய ஆதாரம் என்பதனைக் கையாண்டுள்ளேன்.(எ. கா.) தா, தர, தரவு, தாரம், ஆதாரம் என்பவைகளை உள்ளடக்கியதாக உணருகிறேன். தமிழ் கற்கும் புதியவருக்கு ஒரே சொல்லில் பல சொற்கள் இருக்கும் சொற்களை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன்.
  • நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும். என்ற அறிவிப்பை நாம் கீழே தொகுத்தல் சாளரத்தில் இட்டுள்ளோம். எனவே, ஆதாரம் என்னும் சொல்லை, நாம் பற்ற வேண்டும்.

மேலும், இரண்டு வருடங்களுக்கு முன் தகவலாதாரம் என்று பயன்படுத்தினேன். நீங்கள் தகவல் ஆதாரம் என்று பிரித்தெழுதச் சுட்டியிருந்தீர்கள். இராம்கி அவர்கள் தகவல் என்பது தமிழ் சொல் அல்ல என்ற கட்டுரையொன்றை, நம் விக்சனரி குழுமத்தில் எழுதியிருந்தார். அதனால் தகவல் என்பதனை விட்டுவிட்டு ஆதாரம் என்பதனை பயன்படுத்த விரும்புகிறேன். --த*உழவன் 00:55, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆதாரம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. இதற்காக வேண்டாம் எனக் கூறவில்லை. ஆதாரம், உசாத்துணை, சான்றுகோள் ஆகிய மூன்றுக்கும் இடையேயான வேறுபாட்டை அண்மையில்தான் விக்சனரியில் எழுதினேன். கிடைத்தால் சுட்டுகிறேன். --செல்வா 03:13, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
வார்ப்புரு பேச்சு:தமிழ்ஆதாரம் என்னும் பக்கத்தைப் பார்க்கவும். மேலும் பேச்சு:whisky என்னும் பக்கத்தையும் பார்க்கவும். இன்னும் 4-5 இடங்களிலே இதே கருத்தைப் பேசியுள்ளோம் என்று நம்புகிறேன்.--செல்வா 03:19, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:சான்றுகோள்

Start a discussion