விக்சனரி:கலந்துரையாடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வணக்கம்.நான் சந்திரசேகர். பிறந்து ,படித்து வளர்ந்தது எல்லாம் மதுரை. எனது இருபத்தி ஐந்தாவது வயதில் தொழில் காரணமாக பழனிக்கு வந்து பழனியில் நிரந்தரமாக தங்கிவிட்டேன் . வேதியல் படிப்பு படித்தாலும் புகைப்படத்தொழில் கவனம் செலுத்தி அதை நடத்தி வருகிறேன். தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழை முன்னேற்ற என்னளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் வலைப்பூ ஒன்று தொடங்கி அதில் எழுதி வருகிறேன். எனது வலைப்பூ "சந்துருவின் வலைப்பூ" என்ற பெயரில் உள்ளது. அதில் அவ்வப்பொழுது தோன்றியதை எழுதுகிறேன்.ஆனாலும் மனதை உறுத்தும் செய்தி என்னவென்றால் சுமார் இருபது லட்சம் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் மக்களால் (Waray waray) வரேவரே என்ற மொழி மூலம் கட்டுரைகளின் எண்ணிக்கையில் விக்கிபீடியாவில் பத்தாவது இடத்தை பிடிக்கும் போது ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழரும், நெடிய வரலாறு கொண்ட தமிழ்மொழியும் அறுபத்தி இரண்டாவது இடத்தில் இருப்பதுதான். ஆகவே நான் விரும்பது எல்லாம் எல்லாவற்றையும் தமிழுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் வித்தையை எனக்குக் கற்றுக் கொடுத்தால் நான் இன்னும் பலரை இதில் ஈடுபடுத்துவேன். தமிழை முன்னேற்றுவோம். நன்றி.